பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலப்பல கிகழ்ச்சிகள் 5l. யண அதவலேயினுக்கு வாழ்க்கைத் துனேவியாக அமைந்தார். திருமணம் நிகழும்போது நம் நாராயண அதவலேயிற்கு இருபத்தேழு வயசு : மணமகளாருக்கு இருபத்தொரு வயசு. அந்த அம்மையார்.மெற்ரித்லேஷன் வகுப்புவரையில் ஆங்கிலமொழிப் பள்ளியில்படித்தவர் இல்வாழ்க்கைக்குரிய பலகுணங்களும் வாய்ந்தவர். இவைகளையெல்லாம் நன்கு உணர்ந்தே பார்வதிபாய் தம் புதல்வருக்கு அவ்வம்மையாரை வாழ்க்கைத் துணைவியாராகத் தேர்ந்தெடுத்தார். பார்வதிஅம்மையார் தம் அருமைமைந்தரை உயர்ந்த கல்வி பயில்வித்தார் ; அவருக்கு நல்லொழுக்கத்தைக் கற்பித்தார் : அந்த மைந்தரைப் பொதுநலப்பணியிலும் ஈடுபடுத்தினர் : அவரின் தகுதிக்கு ஏற்ப ஒரு சிறந்த வாழ்க்கைத் துணைவியையும் தேடி அமைத்= தார் . இவை ஒருபுறம் நிகழ்ந்துவர, தமக்குரிய பொதுநலப்பணிகளிலும் ஈடுபட்டுவந்தார் : அப் பணிகளில் ப்ெண்கள்முன்னேற் றமே நம்காட்டுக்கு இக்காலத்தில் இன்றியமையாதது என்று எண்ணினர் அதிலும் இளங்கைம்பெண்களின் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துதலே முதன்மையானது என்று கருதினர். இத்தகைய பணிகளுக்காகவே நம் அம்மையார் ஆயுள் ஊழியர்கழகமாகிய கிஷ்காமகர்ம மடத்தில் சேர்ந்து உறுதிமொழியும் செய்தார்: அவ்விதமே இரவும்பகலும் பாடு பட்டார். நம் அம்மையார் இனி ஒய்வுகொள்ளலாமல்லவா 2 ஆனல், அவர் அவ்விதம் எண்ணவே இல்லை. கம் பெரிதயாரும் ஒய்வுகொள்ளவில்லை. அப்போதுதான் அவர்