பக்கம்:நம் நேரு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

11


வப்பிள்ளையாக வளர்ந்த மோதிலால் இளம் பருவத்தில் பெர்ஸிய, அராபியமொழிகளை மாத்திரமே கற்றுத் தேர்ந்தார், அம்மொழிகளில் அவர் பெற்றிருந்த புலமை வயோதிகர்களையும் பிரமிக்க வைத்ததாம். பிறகு அவர் கான்பூரிலும், அலகாபாத்திலும் ஆங்கிலக்கல்வி பயின்று தேர்ந்தார். சிறுவயதில் படிப்பில் சிறப்புற்று விளங்கியது போலவே, கல்லூரி நாட்களில் குறும்புத்தனத்தில் பெரியவராக விளங்கினாராம் அவர். படிப்பில் காட்டிய ஆர்வத்தை விட அதிகமான உற்சாகத்தை மோதிலால் ஆடம்பர விளையாட்டுகளில் செலுத்தி வந்தாராம். மேல் நாட்டு நடை உடை பாவனைகள், மேல் நாட்டினரின் வாழ்க்கைமுறை இவைகளின் மீது அவருக்கு மோகம் ஏற்பட்டது. கல்கத்தா, பம்பாய் போன்ற பெரிய நகரங்களில்கூட அந்த நாகரிகம் சர்வசாதாரணமாகப் பரவி இருந்ததில்லை. அந்நாட்களிலேயே மோதிலால் மேலை நாகரிகத்தின் ரசிகராக மாறிவிட்டார். அவருடைய முரட்டு சுபாவமும், குறும்புத்தனமும் தலை தூக்கி நினறாலும், அவரது அறிவின் திறனையும் உணர்வின் கூர்மையையும் கண்டு கல்லூரியின் ஆங்கிலேயப் பேராசிரியர்கள் அன்பால் அதிக அன்பு காட்டி வந்தனர்.

கல்லூரிப் பரீட்சைகளில் மோதிலால் விசேஷமான கெளரவங்கள் எதுவும் பெறாமலே தேர்ந்தார். ஆனால் பி. ஏ. இறுதிப் பரீட்சை எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்ட போது, மோதிலால் நன்றாகப் படிக்கவில்லை. முதலாவது நாள் தாம் எழுதிக் கொடுத்த விடைகளை எண்ணி அதிருப்தி கொண்ட மோதிலால் இதர தினங்களில் பரீட்சை எழுதப் போகாமல் தாஜ்மகாலில் காலக் கொலை செய்து விட்டு உரிய நேரத்தில் வீடு திரும்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/14&oldid=1361960" இலிருந்து மீள்விக்கப்பட்டது