பக்கம்:நம் நேரு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

நம் நேரு


தீவிரமாகப் பணி புரிந்தது மோதிலாலுக்கே ஆச்சர்யம் அளித்தது. அவர் சிறைவாசம் ஏற்று மகனைச் சந்தித்துத் தனது வியப்பைச் சொல்லத் தவறினரில்லை. தந்தைமூலம் விஷயங்களை அறிந்த நேரு அதிசயித்தார்; பெருமையும் கொண்டார்.

அதன் பிறகு நேருவின் வாழ்க்கை, வெளி உலகில் சில தினங்கள் என்றால் சிறையில் பல மாதங்கள் என்ற கணக்கிலே தான் விளங்கியது. சர்க்கார் அவரை விடுதலே செய்யும், அவர் பின்னாலேயே வேட்டை நாய்களைப் போல் ஸி. ஐ. டி. களை ஏவி விடும். ஏதாவது ஒரு காரணம்காட்டி மறுபடியும் ஜெயிலுக்கு அனுப்பிவிடும். இதுவே வழக்கமாகி விட்டது. . தன் கணவரைப்போல் தானும் சிறையினுள் போக வேண்டும் என்ற ஆசை கமலா நேருவுக்கும் இருந்தது. அவரது விரும்ப்பம் நிறைவேறக் காலதாமதம் ஏற்பட்டது. ஆங்கில ஆட்சியினர் பெண் அரசியல்வாதிகளைக் கைது செய்யத் தயங்கினர் முதலில். பிறகு வேறு வழி இல்லை எனக் கண்டதும் வனிதாமணிகளையும் ஜெயிலுக்குள் அடைத்தனர். 1931 ஜனவரி முதல் தேதியன்று புது வருஷப் பரிசாக அரசாங்கம் கமலாநேருவுக்கு சிறை தண்டனையை அளித்தது. அதனால் அவர் மிகுந்த மகிழ்வடைய முடித்தது.

சிறையிலிருந்த போதே மோதிலால் நேரு நோயுற்றார். அவர் விடுதலை அடைந்த பிறகும் நிலைமை தெளியவில்லை. நோய் வளர்ந்து முற்றி, அவரைப் படுக்கையில் வீழ்த்திவிட்டது. அவரைக்காண அனுமதித்து நேருவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/81&oldid=1369122" இலிருந்து மீள்விக்கப்பட்டது