பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

வாய்மொழி

- முனிவர்களின் மனத்திலிருந்து திருவாய்மொழிகள்

பரந்து விரிந்து அருவிகள் போன்று கொட்டுகின்றன. கடுங்காற்று போன்ற விரைவுடன் சரிவுகளில் சீறிப் பாய்ந்து வரும் நீர்த்தொடர்களாகிக் இந்த அலைகள் மெய்யறிவானவை, எமுச்சிமிக்க போர்குதிரை போல் எதிர்ப்புகளைச் சாடி நிலைத்து நிற்கின்றன. (இருக் 4)

திருவாய்மொழிகள் மெய்யறிவுக் களஞ்சியம். கடவுளிடத்து அவை தாமாகவே கூடுகின்றன. ஆசை நிறைந்த அன்பு மனைவிகள் புன்முறுவலித்தவாறே தங்கள் கணவன்மாரை அணுகுவதுபோல், இந்த வீறார்ந்த மொழிகள் கடவுளின் சிறந்த

பண்புகளின் ஒவ்வொரு கோணத்தையும்

விளக்கமுறச் செய்கின்றன. (இருக் 4)

நற்றமிழில் நால் வேதம்