பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

கடைத்தெடுத்த சாறத்தை மனிதர்கள் பெறுகிறார்கள். நட்பின் சின்னமான அன்பை நண்பர்களும் உணர்கிறார்கள், அவர்கள் பேசும் பேச்சும் அந்த அன்பின் வயமாக உறுதியாக அமைகிறது.

(இருக் 10)

கண்ணால் காணும் மாந்தர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தெய்வீக மொழியின் ஊற்றுமூலம் புலப்படுவதில்லை. நன்கு காது கேட்பவர்கள் உள்ளனர். ஆனால் அவர்களால் தெய்வீக மொழிகளின், உட் கருத்தைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. கடமைபேணும் தூய உள்ளம் படைத்த

முனிவர்கள் இருக்கின்றனர், அவர்களுக்கே கலைமகள் தனது அழகிய வடிவை வெளிப்படுத்துகிறாள். (இருக் 10)