பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

  1. ot

தொடக்க காலத்தில்

இல்லாதது ஒன்றும் இருந்தது இல்லை அன்று, இருந்தது எதுவும் இருந்ததும் இல்லை, மண்ணகம் இருந்தது உண்டா, கிடையாது. விண்ணகம் தான் இருந்தது உண்டா, அதுவும் கிடையாது. கண்ணுக்கு எட்டாத தொலைவு என்று ஒன்று உண்டா, அதுவும் தான் கிடையாது ஒன்றுமே அன்று இல்லாத நிலையில் எதற்கு எது போர்வை? பின், எங்கே, எவருடைய அரவணைப்பில் நீர் நிலையும் அளவிட முடியாத ஆழமும் நிலவுகின்றன? (இருக் 10)

இறப்பு இல்லை அங்கே, இறப்பு இல்லாத நிலையும் இல்லை அன்று; இரவும் இல்லை பகலும் இல்லை, ஏன் அதன் அறிகுறி கூட இல்லை.

畿e铁* நற்றமிழில் நால் வேதம்