பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

பசுவின் நிறம் கறுப்பாயிருந்தாலும் அது அளிக்கும் பால் மட்டும் வெளுப்பாய், சுவையாயிருக்கிறதே. இதன் மறைபுதிர் உரைத்திடுவாய். (இருக் 4)

அழியாத உண்மையைப் பாராட்டிப் பேசு. உன் செயல்முறைதான் அதற்குச் சான்று. உன் செயல்களில் உண்மை ஒளிரட்டும். (இருக் 3)

முக்கால முழுமை உண்மையையே விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருக்கும் ஒருவன் முடிவில் உண்மையின் உருவாகவே ஆகிவிடுகிறான். நிலையான நெறியைப் எதிரொலிக்கும் "ரீடா" வின் ஆற்றல் எட்டாத் தொலைவில் உள்ளது; அதைத் தேடுபவர்களுக்கு மெய்யறிவு கிட்டுகிறது. தங்களது வாழ்வே ரீடா அளித்ததுதான் என்பதை மண்ணுலகும், விண்ணுலகும் நன்கறியும். 'ரீடா'வின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டே நிகரற்ற ஆற்றல்களும் போற்றிப் பாதுகாத்து வைத்திருக்கும் அமிழ்தத்திற்கு இணையான பாலைத் தருகின்றன.

(இருக் 4)

நிலையான சட்டங்கள் எண்ணற்றவை. இவற்றின் வழி நடந்து கொள்ளும் ஒருவனை எந்த துன்பமும் அணுகுவதில்லை. என்றும் வாழ்வோம் என்ற ஆழ்ந்த எண்ணமே துயரங்களை வேரறுக்கிறது. இந்தச் சட்டங்களைப் புரிந்திருப்பது கூட மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியது.

நற்றமிழில் நால் வேதம்