பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

உள்ளச் சமநிலையை அடைகிறான். நன்கு அறிந்து கொள்ளும் திறனையும், என்றும் நிலைத்திருக்கும் புகழையும்

கடவுள் அவனுக்கு அருள்கிறான். (அதர் 10)

இறைவ, மேலானது, கீழானது, இடைப்பட்டது ஆகிய உனது எண்ணற்ற வெளிப்பாடுகளைத் தெரிந்து கொள்ள அருள்புரிவாய், - அனைத்து வெளிப்பாடுகளிலும் உன்னை நான் தொழவேண்டும். (இருக் 10)

அரும்பெருந் தலைவ, எந்த அருட்காட்சியால் தொல்பழங்கால முனிவர்கள் தெய்வீகத் தன்மை அடைந்தார்களோ, அந்தப் பேற்றினை எனக்கு அளிப்பாய். (அதர் 6)

ஆன்மிகப் பேரறிவில் முழவதுமாகத் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் இருண்மையிலேயே அமிழ்ந்து போகின்றனர். . அதேபோல் நீடித்து நிலைக்கும் வாழ்விற்கு வழி காணாமல் வாழ்வியல் ஆக்கம் தேடுவதிலேயே ஆழ்ந்து போகிறவர்கள் இருட்டிலேயே தடுமாறுகிறார்கள். (யசுர் 40)

நிலையான உண்மையைப் பற்றிய மெய்யறிவு

நிலைபெற்ற அமைதியுடன் பேரின்பத்தையும் அளிக்கிறது. (யசுர் 40)

நற்றமிழில் நால் வேதம்