பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

ஆன்மா என்கிற இறைவன் உடலில் உயிர் பெறுகிறான். ஆனால் அது அவனுக்குத் தெரிவதில்லை.

  1. பார்க்கிறவன் அதனின்று மறைக்கப்பட்டுள்ளான்.

தாயின் கருப்பையில் உயிர் ஒரு சேர

இழைக்கப்பட்டிருக்கிறது. ஆன்மா பல பிறவிகளுக்குட்பட்டது. இறுதியில் அது அழிவற்ற நிலையில் ஒன்றி விடுகிறது. (இருக் 1)

அழியும் உடலுடன் தொடர்புள்ள அழிவற்ற ஆன்மா முன்வினைப் பயன்களின் காரணமாக மீண்டும் பிறப்பு, மறுபடி, பிறப்பு என்று இடைவிடாத நிலையை எடுத்துக் கொள்கிறது. அவை இரண்டும் எப்போதும் எங்குச் சென்றாலும் ஒன்றாகவே செல்கின்றன. உடல் தொடர்பற்ற ஒன்றை மானிடர்களாகிய நாம் புரிந்து கொள்கிறோம். ஆனால், உடலிலிருந்து வேறான ஆன்மாவைப் புரிந்து கொள்வதில்லை. (இருக் 1)

ஒளிவீசும் தான்” என்கிற உரு, பிறந்தவுடன் மற்ற இயல்புகளிலிருந்து தனித்து நிற்கிறது. தனது ஆற்றலின் காரணமாக உடல், மனம் என்கிற இரட்டை அமைப்புச் சிறப்பாகவே செயல்படுகிறது.

(இருக் 2)

நற்றமிழில் நால் வேதம் سسة