பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

g" 168

ஆன்மிகத்தில் ஒழுக்கம்

என் கண்கள் உன்னைத் காணுமாறு நாம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வோம். என் நெஞ்சத்தில் குடிகொண்டிருக்கும் தெய்வீக ஒளி உன்னைப்பற்றி அறிந்து கொள்ள விருப்பம் கொள்கிறது. தொலைவிலுள்ள பொருள்களுக்கும் இடமளிக்கிற என் மனம் அவனைக் காணத் துடிக்கிறது. நான் என்ன பேசப் போகிறேன்? நான் எவ்வாறு அவனைப் புரிந்து கொள்ளமுடியும்?

(இருக் 6)

மற்றவர்கள் பின் பற்றிய அதே வழித் தடத்திலேதான் பெருவாரியான மக்கள் செல்கின்றனர். தங்களுக்கென்று தனிப்பாதை வகுத்துக் கொள்ள வெகு சிலரே துணிகிறார்கள். (இருக் 9)

நற்றமிழில் நால் வேதம்