பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

அறிவாளிகள் இந்தப் பாதையை எளிதாய்க் கடந்து செல்கின்றனர். அறிவிலிகள் பாம்பைப்போல் வளைந்து வளைந்து கடக்கின்றனர். (யசுர் 23)

நான் அவனைக் கண்டிருக்கிறேன், எல்லோருமே அவனைக் காணலாம். நிலத்துக்குமேல் தவழ்ந்து செல்லும் அவனுடைய தெய்வீகத் தேரை நான் காண்கிறேன். வழிபாட்டுப் பண்களை அவன் ஏற்றுக்கொண்டு விட்டான் என்பது எனக்கு நன்றாகவே புலப்படுகிறது. (இருக் 1)

கெடுதிகளிலிருந்து எங்களைக் காப்பாற்றும் ஆடாமல் அசையாமல் ஒளிவிடும் பேரொளி எங்களைச் சூழ்ந்திருப்பதாக உணர்கிறோம். (யசுர் 2)

இந்த இணையற்ற ஒளியும் மகிழ்ச்சியும் எங்களுடன் நிலையாகத் தங்கியிருக்கும் என்று உணர்கிறோம்.

-** * (யசுர்)

இறைவா,. இந்தத் தெய்வீகப் பேரின்பத்தில் நாங்கள் என்றென்றும் திளைத்திருக்க நீ கருணை புரிந்திடுவாய். (யசுர் 2)

மனித குலத்திற்குச் சேவை புரிந்து இறையன்பு கிட்டும் அளவிற்கு அவர்களை ஓங்கி உயர்ந்திடச் செய்ய நாங்கள் உறுதி எடுத்துக் கொள்கிறோம். (யசுர் 5)

த.கோ - தி.யூரீ