பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 -

உலகம் அனைத்து வல்லமையுள்ள இறையாக

எடுத்துக் கொள்ளப்படுகிறது. உலகமாகிற இந்த வரைபடத்தில் வயிற்றின் அடிப்பகுதிக்கு நிகராக நடுப்பகுதி அண்டவெளியின் இடைப்பாகமாகிறது. தலைக்குச் சமமான உச்சிப்பகுதி ஒளிமயமான வெளி அண்டமாகிறது. பாதத்திற்குச் சமமான கீழ்ப்பகுதி நிலமாகிறது. உலகின் கோள் அமைப்பு முழுவதும் இந்த நெறிக்கொப்பவே படிப்படியாக உருப்பெற்றது.

(இருக் 10)

$

உலகத்தைப் படைப்பதில் சர்வ வல்லமையுள்ள கடவுள் ஈடுபட்ட்து. இத்தகைய மகத்தான வேள்வியில் அதனதன் குணங்கள் கொண்ட கடின ஊன்று பொருள்கள் தீயில் இடப்பட்டன. தூய்மையான வெண்ணெய், நெய், இளவேனிற் காலத்தையும், - மரத்துள்கள், வேனிற் காலத்தையும், தானியக் கதிர்கள் மழைக் காலத்தையும் குறிப்பிடுகின்றன. (இருக் 10)

இந்த வையக வேள்வியில் எண்ணற்ற விலங்கினங்கள் தோன்றின. இவற்றுள் மானுடப் பிறவியே மிகச் சிறப்புள்ளது. மனித சமுதாயத்தில் யோகிகள் முனிவர்கள் துறவிகள், தவசிகள், மூதறிஞர்கள், அறிவாளிகள் இருந்தனர். மனிதனின் விலங்குத் தன்மையை அடக்கி, *£ நெறிப்படுத்திச் சமுதாயத்தைக் கட்டமைத்தனர். இந்த வேள்வியில் ஏழு வேலிகள் இருந்தன,

தக திக