பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215

நீதி நேர்மையற்ற முறைகளில் செல்வம் ஈட்டுபவர் அழிந்துபடுவர். (அதர் 7)

நூறு கைகளினால் செல்வமீட்டி, ஆயிரம் கைகளினால் செலவிடுங்கள். நல்ல செயல்களில் நீங்கள் ஈடுபடும் பொழுது உங்களுடைய ஆக்கத் திறனும் நூறுமடங்கு பெருகுகிறது. நல்ல செயல்களுக்கு மனமுவந்து வழங்குபவர்கள் இறைவனின் ஆசியை அடைவர். (அதர் 3)

ஓ, மாந்தனே, மகிழார்வத்துடன் திறன்பட உழைத்திடு. வறுமை நோயாகிய கொடியதை விரட்டிவிடு. மக்கள் நலனுக்காகப் பயனுள்ள செயல்களில் ஈடுபடும் மாந்தர்களை, நேர்மையாக ஈட்டிய உன் செல்வம் ஆதரிக்கட்டும்.

(அதர் 6)

எனது வீழ்ச்சிக்கு அடிகோலும் செல்வத்தை என்னிடமிருந்து புறம் தள்ளிவிடு. ஏனெனில், இத்தகைய செல்வம் எனக்கு இகழ்ச்சி அளிக்கும். நாலா திசைகளிலிருந்தும் என்னைச் சுற்றி வளைத்திடும் ஆதரவளிக்கும் மரத்தையே நச்சுச் செடி பட்டுப் போகச் செய்து விடுவதைப் போல என்னை அழித்துவிடும். செல்வத்தின் தலைவ, உனது கைகள் பொன்னிறமானவை, அந்தக் கைகளினால், நிறைவும், மகிழ்ச்சியும் அளிக்கும் செல்வத்தை ஈட்ட என்னை வாழ்த்திடுவாய். (அதர் 7)

த.கோ - தி.யூரீ *#ు