பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

%

k

216

பசியினால் மட்டும் இறப்பு நேரிட்டு விடுவதில்லை. வயிறு முட்டும்வரை உண்பவர்களையும் இறப்பு விட்டு வைப்பதில்லை. தன் செல்வத்தை மற்றவர்களிடையே பகிர்ந்து கொடுப்பவன் இறைவனால் வாழ்த்தப்படுகிறான். தன்னிடமிருப்பதை மற்றவர்களுடன் சேர்ந்து நுகராமலிருக்கிறவனுக்கு நண்பனே கிடைக்க மாட்டான். (இருக் 10)

தானியத்தையோ, பணத்தையோ பதுக்கி வைத்து வெற்றாரவார வாழ்க்கையை நடத்திக் கொண்டு பட்டினி கிடந்து வாடும் ஏழைகளின் நிலையைப் பற்றி கவலைப்படாமலிருக்கிறவன். ஒரு பொழுதும் உண்மையான நண்பனை அடையமாட்டான். (இருக் 10)

அறிவொளிமிக்க முனிவன், எளிய பிச்சைக்காரன், முடிவன், இவர்களில் எவராயிருந்தாலும் சரி, அவர்களுடன் எவனொருவன் தன் உணவைப் பகிர்ந்தளிக்கிறானோ, அவன் புசிக்கும் உணவே புனிதமானது. அத்தகைய எடுத்துக் காட்டானவன் என்றென்றும் இறைவனால் வாழ்த்தப்படுகிறான். அவன் தன் எதிரிகளைக் கூட நண்பர்களாக்கிக் கொள்வான். (இருக் 10)

அறம் செய்பவர்கள், அதன் மூலம் பிறர் நலனில் அக்கறை காட்டுபவர்கள் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். (சாம 285)

நற்றமிழில் நால் வேதம்