பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223

வில்லோடு அழுத்தமாகப் பிணைக்கப்பட்டுள்ள இந்த நாண் போர்க்களத்தில் விரையும் பொழுது ஒரு வகையான ஒலி எழுப்புகிறது. வாளி ஆகிய தன் நண்பனை அனைத்து அரவணைத்து, வில் ஏதோ இன்மொழிகள் பேசுவது போன்று தோன்றுகிறது. (இருக் 6)

தாய் தன் மகவை மடியிலிட்டுப் புரத்தல் போல, வில்லின் இரு முனைகளும் ஒன்றையொன்று தழுவிய வண்ணமிருக்கின்றன. வில்லும் அம்பும் மாறி மாறி, இயங்கி எதிரிகளைத் துளைத்து விரட்டி அடிக்கட்டும். (இருக் 6)

பஞ்சு போன்ற சிறகு கொண்டது வாளி, அதனுடைய முனை மானின் கொம்பு போன்றது, பசுவின் தசை நாரினால் கட்டப்பட்டது அது. தனது இலக்கை அடைந்ததும் தங்கி விடுகிறது. எங்கெல்லாம் மக்கள் கூடுகிறார்களோ பிரிகிறார்களோ, அங்கெல்லாம் இந்த அம்புகள் பாதுகாப்பு அளிக்கின்றன. (இருக் 6)

நேர் முகமாய் பறந்து செல்லும், வாளியே, எங்களைப் பாது காத்திடு. எங்கள் உடலம் கல் போன்று திடமாயிருக்கட்டும். அருள்மிகு இறைவன் எங்களுக்கு ஊக்கமளிக்கட்டும். முழுமுதல் கொற்றவை எங்களுக்கு வெற்றியளிக்கட்டும். (இருக் 6)

த.கோ - தி.யூரீ