பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27Ο

எண்ணித் தொழுகிறார்கள். அவன் ஆற்றல் மிக்கவன். ஒளிவீசும் பேரண்டத்தையும், மற்ற தெய்வீக ஆற்றல்களையும் படைப்பதற்கு முன்னரே புகழ்பெற்றவன் அவன். இவ்வளவு உயர்ந்த செம்பொருளை அறிந்து புரிந்து கொள்ளும் மனிதன் நற்கதி அடைகிறான்.

(இருக் 10)

பேரருளறிவு பெற்ற அறிவாளிகள் அன்பையே வீடு பேற்றுக்கு வழி என மொழிகின்றனர். உள்ளுணர்வு மூலம் செம்பொருள் உணரும் பேறு பெற்ற பொருளறிந்த அறிவாளிகள் தங்கள் உடல் வல்லமைகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் சிந்தனை ஆற்றலை நெறிப்படுத்திக்கொள்ளும் திறம் பெறுகிறார்கள். (இருக்)

ஆன்மிகநெறி, உலகியல் வாழ்முறை என்பவை இறைவனின் இரண்டு சிறப்பான குணநலன்களைக் குறிக்கின்றன. பகலும் இரவும் அவனது இரண்டு மாறுபட்ட நாள்களைக் குறிப்பிட்ட போதிலும், ஞாயிற்றாலும் விண்மீன் கூட்டங்களாலும் ஒளியூட்டப்ப்ட்ட வெளி விண்வெளி அவனது பேரண்ட நிலையிருந்தலைப் பறை சாற்றுகின்றன. வெளிவிண்வெளியும், மண்ணகமும் வாயின் இரண்டு தாடைகளைப் போன்றவை. அவனது தெய்வீக விருப்பத்தின் பலத்தினால் பேரண்டம் படைக்கப்பட்டது.

நற்றமிழில் நால் வேதம்