பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283

கதிரவனைப் போன்றே ஒளி மிக்கனவாகவும், நெருப்புப் போன்ற சுடர்கள் உள்ளனவாகவும் இருக்கிற தெய்வீக 駕 ஆற்றல்கள் பல உண்டு, * அவை யாவும் நமது போற்றுதலுக்கு உரியவை. தங்களுடைய பெரும் வலிமை மூலம் உலகளாவிய வேள்வியாகச் செயல்களை நடத்தி வைக்கிறான்.

(இருக் 7)

இயற்கையின் நலமிக்க பேறுகளில் கண்போன்றவனும், கதிரவன் மண்டல அமைப்பின் தலைவனுமாகிய செங்கதிர்த் தேவன் அழிவற்ற அனைத்து நலன்களும் அளிக்கும் ஒளியை எங்கும் பரப்புகிறான். படைப்பின் முழு முதலாகிறவன் அவன், எல்லா இடங்களையும் தெளிவாகத் தெரியவைக்கிறான். * (இருக் 7)

முடிவுகாண முடியாத அன்னையின் குழந்தையாகிய தங்களுக்குத் தாங்களே ஒளி அளித்துக் கொள்ளும் செங்கதிர்த் தேவர்கள் நோய்களை அகற்றட்டும்; பகை மனப்பான்மையை விரட்டட்டும். துயரங்கள், துன்பங்கள்

நம்மை நெருங்காதிருக்கச் செய்யட்டும். (இருக் 8)

இருந்த இடத்திலேயே இருந்தாலும் சரி, நகர்ந்து கொண்டே இருந்தாலும் சரி, ஞாயிறே உலகின் உள்ளுயிர். (அதர் 13) 1£

த.கோ - தி.பூரீ