பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O3

யசுர்வேதத்தில் ஆழ்ந்த மெய்யறிவுள்ள பார்பனர்கள் இருக், சாம வேத புகழ்ப் பாடல்களால் தொழுகின்றனர். தாங்கள் அளிக்கும் தெய்வீகப் பழச்சாற்றை இறைவன் ஏற்றுக் கொள்ளும் வகையில் புரோகிதர்கள் மந்திரங்கள் சொல்வதில் ஆழ்ந்திருக்கிறார்கள். உலகத்தை உருவாக்கவல்ல அந் நாளைய முனிவர்கள் மந்திரம் ஒதுகின்றனர். மந்திரங்களைப் பொழிகிறார்கள், வேள்விக்கான அந்த நிலமங்கை நாங்கள் நாடும் செல்வத்தை எங்களுக்கு நல்கட்டும். இந்தப் பொறுப்பை இறைவன் நிலத்தாயாருக்கு அளிக்கட்டும்.

எங்களை வழி நடத்தட்டும். (அதர் 12)

இறைவன் புகழ் பாடி மக்கள் ஆடிப்பாடி மகிழ்வது நிலத்தாயின் மடியில்தான். போர் ஆரவாரங்கள் முழங்க களபேரிகை கொட்டப் போர்க்களத்தில் வீரர்கள் காட்டுவது நிலத்தின் மடியில்தான். அந்த நிலத்தாய் நமது எதிரிகளை விரட்டியடிக்கட்டும் நமக்கு எதிரிகளே இல்லாதபடி செய்யட்டும்.

(அதர் 12)

வரங்கள் பல வழங்கி, அழகும் ஒளித் தோற்றமும் கொண்டு நாம் விளங்க, இயற்கை அன்னை நமக்கு அருள் புரியட்டும். (அதர் 12)

உணவுக் கூலங்கள், அரிசி, வரகு யாவும் நிலத்தில் விளைகின்றன.

த.கோ - தி.யூரீ