பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O2

உனது, கிழக்கு, வடக்கு,தெற்கு, மேற்குப் பகுதிகள் நாங்கள் நடந்து செல்வதற்கு ஏற்ப, நலமாய் இருக்கட்டும். நான் உலகில் வாழும் காலம் வரை, தடுமாறி விழாமல் இருப்பேனாக. (அதர் 12)

ஓ, நிலம் என்னும் நல்லாளே, ஞாயிற்றைத் துணையாகக் கொண்டு உன்னைச் சுற்றும் முற்றும் பார்க்கும் காலம் வரை, ஒன்றன்பின் ஒன்றாக ஆண்டுகள் தொடரும் வரை, எனது பார்வை மங்காதிருப்பதாக.

(அதர் 12)

ஓ, நிலத்தாயே, நான் அள்ள அள்ளக் குறையாமல் உனது செல்வம் சற்றும் குறையாமல், மேலும் மேலும் வளர்வதாகத் தூய்மைப்படுத்துகிறவளே, உனது உள்ளத்தை நாங்கள் என்றுமே புண்படுத்தாமலிருப்போமாக. (அதர் 12)

ஓ, நிலமங்கையே, உனது கோடைக்காலம், மழைக்காலம், பனி மாதங்கள், குளிர்காலம், வேனிற்காலம் இலையுதிர்காலம் ஆகிய ஆண்டின் இரவு பகல்களை உருவாக்குகிற இத்தனைப் பருவகாலங்களும் எல்லா வளங்களையும் எங்கள் மேல் பொழியட்டும்.

(அதர் 12)

நிலத்தின் மேல் புனிதமான இடமும் கொட்டகையும் கட்டப்பட்டுள்ளன. கம்பங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

நற்றமிழில் நால் வேதம்