பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 11

ஓ, ஆறுகளே, எனது நுகத்தடியின் முனை நீர்ப்பரப்பின் மேல் தலை தூக்கி நிற்பது போல், உங்களது அலைகள் மேலோங்கி தவழ்ந்து செல்லட்டும். மதகுகள் நலன் கருதி நீங்களிருவரும் இணைந்து அமைதியுடன் கட்டுப்பாட்டுடன் வழி நடப்பீர்.

(இருக் 9)

தெய்வீக ஆறுகளே, உங்கள் இயற்பண்பில் மனம் மகிழ்ந்து. நூற்றுக் கணக்கில் மக்களைப் புனிதப் படுத்துகிறீர்கள். இயற்கை ஆற்றல்களை அடியொற்றிச் செல்கிறீர்கள். இறைவன் விதித்த மேலான அறமுறைகளை அவை ஒரு பொழுதும் மீறுவதில்லை. இத்தகைய ஆறுகளுக்கு உங்கள் அன்பும் ஆசையும் சேர்த்து படையலாகச் செலுத்துங்கள். (இருக் 10)

பசுமை திகழும் பள்ளத்தாக்குகளின் தனிமையில், ஆறுகளின் கூடலில் முனிவர்கள் தெய்வீக உள்ளுணர்வு பெறுகிறார்கள். (இருக் 10)

இறைவனின் கருணையினாலேயே, இந்த நலம் நிறைந்த புத்துணர்ச்சி அளிக்கும் வானமிழ்தம், நூற்றுக் கணக்கிலான, ஆயிரக் கணக்கிலான நீரோடைகளில் சென்று கலந்து நிற்கிறது. கால் பதித்த இடமெல்லாம் தூய்மை, அழகு, மகிழ்ச்சி பொங்கி எழுகின்றன. இறைவனை மகிழ்ச்சியுறச் செய்யவே ஊற்றுகள் பொங்கி + இன்னிசையாக மலர்கின்றன. (இருக் 10)

த.கோ - தி.பூரீ