பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

322

பருவங்கள்

இயற்கை அன்னையின் பல்வேறு நிலைகளில் மகிழ்ச்சி கொள். பல்வேறு உருவங்களில் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் கண்ணுக்குப் புலப்படாத தெய்வீக மேன்மைப் புகழை நுகர்ந்து கொள். மலர்களின் பருவகாலம் இன்னிளவேனில் இன்பத்தைக் கொள்ளை கொள்ளும் மணம் கொண்ட தென்றல் வீசுகிறது அந்தப் பருவத்தில். அடுத்துத் தொடரும் வேனிற் காலத்திற்கும் அதற்கேற்ற ஒரு பேரழகு இருக்கிறது. கருமுகில்களும், கண்ணைப் பறிக்கும் ஒளி அலைகளும் கொண்ட மழைக்காலம் தனது பேரொளியினால் மண் முழுவதையும் நீராட்டுகிறது. இலையுதிர்காலம், பனிக்காலம், ஆகிய பருவங்களும் அவற்றிற்கான எழிலும், கவர்ச்சியும் கொண்டவை.

(சாம 616)

நற்றமிழில் நால் வேதம்