பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் எழுதிய 'வடமொழி இலக்கிய வரலாறு'-நூல் பெரிதும் என்னை ஈர்த்தது. அதன் சுருக்க வெளியீட்டை என் நண்பர் ஒருவர்க்குத் திரட்டித் தந்தேன். அன்றிலிருந்தே வேதங்களின் சிறந்த அரிய பாடல்களைத் தேர்ந்தெடுத்துத் தமிழில் தர விரும்பியிருந்தேன்.

உலகில் எந்த இலக்கியமும் பெண்ணின் அச்சாணி யின்றி ஓடுவதில்லை. அதற்கு ஒப்ப என்றன் வளர்ப்பு மகள் த. சித்திரா, எம்எஸ்சி, ஒருநாள் 'Holy vedas என்ற ஒரு நூலை உருபா 415/- கொடுத்து வாங்கிவந்தாள். இதனைத் தமிழில் தாருங்கள் என்று விரைவு படுத்தினாள். வேர்கள் இருப்பது செடி கொடி மரங்களின் பயன்ை வெளிப்படுத்தவே என்பதை மெய்ப்பிப்பது போல என்னையொத்த இலக்கியவாணர் வடமொழியிலும் ஆங்கிலத்திலும் ஆழங்கால்பட்ட திரு. தீ. பூரீநிவாசராஜகோபாலன் மொழி பெயர்ப்பதிலும் சமற் கிருதத்தோடு ஒப்பு நோக்குவதிலும் எனக்குப் பேருதவி புரிந்தார் -

வேதகாலவாணர் எண்ணங்களின் ஓட்டம் நுங்கும் நிரையுமாய்ப் பொங்குமாங்கடலாய்ப் பெருகிவரும் கங்கையைப் போன்றது. வாழ்வியக்கம் பற்றியும், இயற்கையின் மறையுதிர், வேளாண்மையின் சிறப்புப் பண்புகள், இருசுடர் விழுமச் செய்தி களையும் அவற்றின் மொழியினுக் கடங்கா எழிற் கோலத்தையும் இயம்பும் பாடல்கள் என்றும் சிந்து கங்கைபோல் வாழ்வன.

அறிவியலின் வித்துகள், செம்மாந்த வாழ்வின் சிந்தனைக் கீற்றுகள் ஊடே உடலோம்பும் மருத்துவ முறைகள் மாண்புடையன. ஆனால் மந்திர தந்திரங்கள் இடைச்