பக்கம்:நற்றிணை-2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றினை தெளிவுரை jff உள்ளிடு பரல்கள். தேர்நடை பயிற்றல்-சிறுதேர் உருட்டிய படி நடை பயிலுதல். 5)ಿ: மழலைப் பேச்சு, பூநாறு செவ்வாய்-செவ்வாம்பலைப்போலத் தோன் றும் சிவந்த வாய். துரப்ப-செலுத்த. வேறு உணர்ந்துஎன்னை வேற்ருனைப் போலக் கருதி; இப்படிக் கருதியது ஊடற் சினத்தால் என்க. வெரூஉம் அஞ்சும்; அஞ்சுவது பகை விலங்குகளைக் கண்டவிடத்து. இகந்து-கைகடந்து. விளக்கம் : "தலைவன் தன்னை விரும்பி வந்தான் அல் லன்; தெருவிற் போவோன் தன் புதல்வனைக் கண்டதும் பாசத்தால் ஈர்க்கப் பெற்று, அவனைத் தூக்கியபடி உள்ளே வந்தவன், வந்தவிடத்துத் தன்னைக் கண்டதும் ஆசை மீதுார நெருங்குகின்றனன்” என்பதனை அறிந்த தலைவி, இவ்வாறு கடிந்து அவனைவிட்டு ஒதுங்கி நிற்கின்ருள். தங்கள் உறவின் பேருகிய புதல்வனையும் நினையாளாய், நீ யாரையோ? என்று சொன்னாள். இதுதான் தலைவனுக்கு நகைப்பைத் தருகின்றது. அதனைத் தன் பாணைேடும் சொல்லி மகிழ் கின்ருன் அவன் இதல்ை, பாணனும் நகைகொள்ளத் தலைவியும் தன் சினந்தணிந்து தலைவனை ஏற்று இன்புறுத்து வாளாவது பயனுகும். மேற்கோள் : கரணத்தின் அமைந்து முடிந்த கால்ை' எனத் தொடங்கும் தொல்காப்பியச் சூத்திரத்தின் (தொல். பொருள்.) 'அழியல் அஞ்சல் ஆயிரு பொருளினும் தானவட் பிழைத்த பருவத்தானும் என்றதற்கு இச்செய்யுளை எடுத் துக் காட்டுவர் இளம்பூரணனர். இச்சூத்திரத்தின், ஏனை வாயில் எதிரொடு தொகை_இ என்னும் பகுதிக்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இஃது ஏனை வாயிலாகிய பாண னுக்கு உரைத்தது' என்பர் நச்சிஞர்க்கினியர். 251. டிேனை விளைமோ தினையே! பாடியவர் : மதுரைப் பெருமருதன் இளநாகனர், திணை குறிஞ்சி. துறை : சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது. ((து.வி.) தினையை நோக்கிக் கூறுவதுபோல அமைந்தது இச் செய்யுள், புனங்காவல் கொண்டிருக்கும் காலத்தே வந்து, களவொழுக்கத்திலே ஈடுபட்ட தலைவனின் உள்ளத்திலே, தலைவியை விரைந்து வந்து வரைந்து மணந்து க்ொள்வதை வற்புறுத்த நினைக்கின்ருள் தோழி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/113&oldid=774105" இலிருந்து மீள்விக்கப்பட்டது