பக்கம்:நற்றிணை-2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iš6 r நற்றிணை தெளிவுர்ை நமக்குள்ள நாணத்தாலே மறைத்தேமாய், நாமும் அவருக்கு நம் துயரைப்பற்றி ஒரு சொல்லேனும் சொல்லே மாயினேம். எனினும், - - பசியது மிகுதியாலே இரைதேடி வருதற்குச் செல்லு தலைத் தான் விரும்பியபோதும், தலைச்சூலாலே உண்டாகிய இயங்கமாட்டாத தன் வருத்தத்தினலே, கானற் கழிக்குத் தான் செல்லாது, கழனிக் கண்ணேயே தங்கியிருந்து விட்டது வளைந்த வாயையுடைய நாரையின் பேடை ஒன்று; அதற்கு, உடல் வளைந்த நாரைச் சேவலானது, கடலிடத்து மீனைப் பற்றிக் கொண்டுபோய் அன்போடுங் கொடுக்கும்; அத்தகைய மென்னிலமான கடற்கரைத் தலைவனைக் கண்டதும், பலகால் நாம் ஒளித்துக்கொள்ள முயலவும், அதற்கு உட்படாதே கைகடந்து, நின் மையுண்ட கண்களி லிருந்து வெளிப்படுகின்ற கண்ணிரே நம் வேட்கை நோயை எடுத்துச் சொல்வதாயிற்றே! இனி, யாமும் யாது தான் செய்வோமோ? - சொற்பெரருள்: இறை-முன்கை. கெளவை-பழிச்சொல். கடுஞ்சூல்-தலைச்சூல். கானல்-கழிக்கானல். கொடுவாய். வளைந்த வாய், முடமுதிர்நாரை-உடல்வளைந்த நாரைச் சேவல். கைம்மிகல்-அளவு கடந்து வெளிப்படல். - விளக்கம் : தலைமகள் தானுறு துயரைத் தானே தலைமகனுக்கு எடுத்துச் சொல்வது என்பது பெண்மை இயல்பு ஆகாமையின், அதனைக் காப்பதற்கு முயன்றனர் என்றனள். தன்னுறு வேட்கை கிழவன் முற் கிளத்தல், எண்ணுங்காலை கிழத்திக்கு இல்ல்ை என்ப்து களவியல் விதியாகும் (தொல். களவு 21). ஆயின், அவனைக் கண்டதும் பெருகிவழியும் கண்ணிர், அவனுக்கு அவளது நோயின் மிகுதியைக் காட்டும் என்பதாம். தன்னுட்டுப் பறவையும், தன் பேடைக்கு நலிவு தீர்த்தற்கு விரையச் செயல்படுகின்ற அன்புடைமையைக் காண்பவன், தானும் அதனை மேற்கொள்ளாததனே எண்ணி வெட்கமுற்று, விரையச் செயற்பட முனைவன் என்பதாம். தலைவியின் வனப்பிழந்த நெற்றி முதலாயினவற்றைத் தலைவன் கண்டறிந்தானல்லையோ எனின், அவனது ஆர்வத்து மிகுதியும், தலைவியது வேட்கை மிகுதியும் அவற்றைக் கண்டும் உணரவிடாது செய்தன வென்று கொள்ளுக. v

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/140&oldid=774135" இலிருந்து மீள்விக்கப்பட்டது