பக்கம்:நற்றிணை-2.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றின் தெளிவுரை l 161 கடந்து, அறனிலாளருகிய அவன் என்பால் வந்து, என்னைப் புகழ்தற்கு எத்தகைய துயரத்தைப் பெரினும், அதனைத் தாங்கியிருக்கவும் யான் வல்லமை உடையேன். ஆதலின், நீதான் கவலையடைதல் வேண்டாம் காண்! கருத்து: பிரிவை அவன் வரும்வரை பொறுத்திருப் பேன்’ என்பதாம். | | சொற்பொருள் : செந்நெல் - நெல்வகையுள் ஒன்று, சிவப்பான அரிசி கொண்டது. படை - அரிவாள். மயங்கியவருத்தமுற்றுக் கலங்கிய, படுக்கை - பாயல்; அது நெற் சூடு. விழுமம் - துன்பம். தெறுகதிர் - வாட்டும் வெம்மை கொண்ட கதிர். பேதைத் தன்மை; இது கதிரவன் வரவு கண்டதும் துயரை மறந்து பசுவாய் திறந்து மலர்தல். அறனிலாளன் - அறநெறியைக் காக்கும் பண்பற்றவன்; தலைவனைக் குறித்தது; தன்னல் காதலிக்கப்பட்டாளை முறைப்படி மண்ந்து இல்வாழ்வாகிய அறத்தைப் ப்ேணுதலை மறந்தவன் என்பதனுல் இப்படிக் கூறினுள்; இதனால், தான் மணத்தை விரும்புவதையும் உணர்த்தினள். என் பெறினும். எவ்வகைத் துயரத்தை அடையப் பெறினும்; துயரமாவன, பிரிவால் நேர்ந்த்தும், அன்னை அறித்லால் விளையும் அச்ச மும், அலருரைகளால் உண்டாகும் பழியும் போல்வன. விளக்கம்: பேதை நெய்தல் பெருநீர்ச் சேர்ப்பன் என்றது, நெய்தற்கு உறும் துயரத்தை அறியாதே போயின தலைவன் என்றுதாம். இதல்ை, தானுற்ற துயரத்தை அள னுக்குக் குறிப்பாகப் புலப்படுத்தினள். நெய்தல் படை யொடுங் கதிரொடும் மயங்கினற் போலத், தானும் தலைவனின் கர்தன்மையோடும், தன் குடும்பப் பாங்கோடும் உழன்று மயங்கிய நிலையையும் உணர்த்துகின்ருள். கதிரவன் தெறுகதிர் வரவு கண்டதும், நெய்தல், தான் துயரை மறந்து பூவை மலரச் செய்து களிப்பதுபோலத், தானும் அவன் வரைந்து வருதலோடும், தன் துயரையும் மறந்து களிப்பவ பவளாவள் என்பதுமாம். இதல்ை, பெண்மையின் திண்மை யான தன்ழையைத் தோழிக்கு உணர்த்தினள். நெய்தல் வைகறைப் போதில் மலர்வது. ஆகவே, இரவெல்லாம் துயருற்ற தலைவியும் வைகறைப் போதில் இல்லத்தார் தன் நிலையைக் காணுமற்படிக்குத் தன் துயரை மறைத்து முக மலர்ச்சியோடும் புறத்தே தோன்றுவாள் என்பதாம். - உள்ளுறை : நெய்தல், தான் பல துயருற்ற போதும், கதிரவன் தோன்றவும் மலர்ந்தாற்போல, பிரிவுத் துயு l

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/165&oldid=774162" இலிருந்து மீள்விக்கப்பட்டது