பக்கம்:நற்றிணை-2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哆 160 余 - நற்றிணை தெளிவுரை 275. பேதை நெய்தல் பெருநீர்ச் சேர்ப்பன்! பாடியவர் : அம்மூவர்ை. திணை : நெய்தல். துறை : சிறைப்புறமாகத் தலைமகனது வரவு உணர்ந்து வற்புறுப்ப, வன்முறை எதிர்மொழிந்தது. - . ((து. வி.): தலைவன் வந்து செவ்வி நோக்கியபடி ஒரு சார் ஒதுங்கி நிற்கின்றன். அதனை அறிந்த தோழி பிரிவுத் துயராலே வாடியிருக்கும் தலைவியைத் தேற்றுவாளாக, "அவன் விரைவிலே வருவான்’ என்று வலியுறுத்தி கூறு கின்ருள். அவளுக்குத் தன்னுடைய கற்புத்திண்மையும் வருத்தமும் புலப்படத் தலைவி பதிலிருப்பதாக அமைந்த செய்யுள் இது.) செந்நெல் அரிகர் கூர்வாட் புண்ணுறக் காளுர் முதலொடு போந்தெனப் பூவே படையொடுங் கதிரொடும் மயங்கிய படுக்கைத் தன்னுறு விழுமம் அறியா மென்மெலத் தெறுகதிர் இன்துயில் பசுவாய் திறக்கும் 5 பேதை நெய்தல் பெருர்ேச் சேர்ப்பற்கு யான்கினைந் திரங்கேன் ஆகநோய் இகந்து அறனி லாளன் புகழ்வென் பெறினும் வல்லேன்மன் தோழி யானே! தெளிவுரை : தோழி! முற்றிய செந்நெற் கதிரை அரிப வரது கூரிய வாளாலே அறுக்கப்பட்ட நெய்தலானது, அதனைக் காணுதவரான அவரது நெற்கதிர்க் கட்டுக்க ளோடுஞ் சேர்ந்து, களத்திற்கும் போய்ச் சேரும். தன்னை அறுத்த வாட்படையோடும், தன்னை எப்புறமும் அழுத்திய படி யிருக்கும் கதிர்களோடும் நேர்ந்த துயராலே கலங்கிய அந்நெய்தலானது, சூட்டோடு கிடக்கும் தனக்குற்ற துயரத் தையும் அறியாதாகி, இனிய துயிலைப் போக்கியபடி வெம்மையாலே தாக்கும் கதிர்களைக் கொண்ட கதிரவனின் வரவைக் கண்டதும் மகிழ்ச்சியுற்றதுமாகித், தன் பசிய இதழ்களைத் திறந்தபடி பூத்தலையும் செய்யும். அத்தகு பேதைமை வாய்ந்த நெய்தலைக் கொண்ட கடற்கரை நாட் டவன் நம் தலைவன். அவனுக்காக, அவன் என்னைப் பிரிவுத் துயராலே நலியச் செய்த கொடுமையை நினைந்தும், அதேைல நமக்குற்ற பழியைக் கருதியும், யான் ஏதும் வருந்த மாட்டேன். என் நெஞ்சத்து நோயின் கொடுமையையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/164&oldid=774161" இலிருந்து மீள்விக்கப்பட்டது