பக்கம்:நற்றிணை-2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | நற்றின தெளிவுரை 171 வயலாமையது. பசிய கற்போன்ற முதுகிலே, அவ் வயலைக் காவல் செய்யும் மள்ளர்கள், தர்ம் சுடுகின்ற நத்தையை உடைத்துத் தின்பார்கள். அத்தன்மையுடைய பழமை முதிர்ந்த வேளிர்களது குன்றுாரைப் போன்றது என் மனை. அந்த என் நல்ல மனையினிடத்தே, மிகுதியான விருந்தினர்களை நாளும் உபசரித்தலாலே கையொழியாமை யினலே, யான் அவனைப் பல நாளாகச் சந்திக்கப் பெற்றி ல்ேன். அதற்ைருன், அவன்பாற் புலவாதுள்ளேன், காண்ப்ா யாக! அவனைப்பற்றிய பிற எவையுமே எனக்குத் தோன்றிற் றில்லை என்கின்ருள் அவள். - சொற்பொருள்: கொக்கின் கூம்பு-கொக்கு தலையை உடலுள் ஒடுக்கியபடி யிருக்கும் நிலை. முகை-அரும்பு. பாசறை-பசிய கற்போன்ற மேற்புறம். கைதுாவல்-கை யொழிதல். பழனம்-வயல். காவலர்-காவல் செய்வோர். விளக்கம்: கொத்தாலே வீ ழ் ந் த மாங்கனியானது கொக்கின் ஒடுங்கிய நிலைபோன்ற அரும்புகளைக் கொண்ட ஆம்பல்கள் நிரம்பிய ஆழ்குட்டத்து நீரில் துடும் என்ற ஒசையுடன் விழும் ' என்றது, மருதத்தின் நீர்வளமிக்க தன்மையை நன்கு காட்டுவதாகும். இரண்டாவது துறைக்கேற்ப உரை கொள்வதாயின், 'ஊரன் வேறுபட்டவகை நடந்ததனை நினைத்து அவனிடத்து ஊடாதே கொள்' என்றன; அவன் என்பால் வருவதே அரிதாதலால், ஊடினல் முற்றவும் வெறுக்குமோ என்று கருதி யான் அஞ்சுவேன்" என்று தலைவி சொன்னதாகக் கொள்க. | உள்ளுறை: கொக்காலே உதிர்ந்த மாம்பழமானது, ஆம்பற் பொய்கையிலே துடுமென வீழும் என்றது, பரத்தை யாலே வெறுத்து ஒதுக்கப்பட்ட தலைமகன், நின்னே வாயி லாகக் கொண்டு, இவ்விடத்துக்கு வந்தனன் போலும் என்றதாம். | இறைச்சி: வயல் காப்பவர், சிறப்பில்லாத நத்தை யைச் சுட்டு, ஆடிையின் புறஒட்டிலே தட்டியுடைத்துத் தின்பர் என்றது, தலைவனும் சிறப்பில்லாத பரத்தையின் நலனை விரும்பியவனுய், அவளைத் தன் பாணனின் உதவி யாலே பெற்று மகிழும் இயல்பினவைான் என்றதாம், |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/175&oldid=774173" இலிருந்து மீள்விக்கப்பட்டது