பக்கம்:நற்றிணை-2.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

أسب & நற்றின் தெளிவுரை S 280. நன்மன நன்விருந்து அயரும் ! ཀི་ பாடியவர்: பரணர். திணை : மருதம். துறை: (1) R வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்து மொழிந்தது. (2) தலைமகனை ஏற்றுக்கொண்டு வழி பட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லிய தூஉம் ஆம். (து.வி.) (1) பரத்தையின் உறவினலே தலைவியை மறந்தானகிப் பிரிந்து சென்றிருந்தான் தலைவன்; அவன் மீண்டும் தலைவியைக் கூடுதலே விரும்பியவளுக்த் தோழியைத் தூது விடுக்கின்ருன். அவள், தலைவியிடம் சென்று, தலைவனை மீண்டும் ஏற்குமாறு சொல்ல, அவள், தன் மனநிலையை விளக்குவதாக அமைந்த சுவையான செய்யுள் இது. (2) தலைமகனைப் புலந்துவிடாது தலைவி ஏற்றுக் கொள்ள, அவள் நிலையைத் தோழி புகழ்ந்து கூற, அவளுக்குத் தலைவி சொல் லியதும் இது.) - கொக்கினுக் கொழிந்த தீம்பழங் கொக்கின் கூம்புநிலை யன்ன முகைய ஆம்பல் தூங்குநீர்க் குட்டத்துத் துடுமென வீழும் தண்துறை யூரன் தண்டாப் பரத்தமை புலவாய் என்றி தோழி!-புலவேன் 5 பழன யாமைப் பாசறைப் புறத்துக் கழனி காவலர் சுடுநந்து உடைக்கும் தொன்றுமுதிர் வேளிர் குன்றுர் அன்னவென் கன்மனை கனிவிருந் தயரும் கைது வின்மையின் எய்தா மாறே! 10 தெளிவுரை: 'தோழி! கொக்கு அமர்ந்ததஞலே, கிளை அசைவுற்று மாங்கனியும் விழ்ந்தது. வீழ்ந்த இனிய அம் மாங்கனியானது, கொக்கினது குவிந்த நிலைபோலத் தோற்றும் அரும்புகளையுடைய ஆம்பல்மிகுந்த, ஆழமிகுந்த நீரினுள்ளே துடுமென்னும் ஒலியோடே வீழும். அத்தகைய தண்ணிய நீர்த்துறைகளைக் கொண்டவன் நம் ஊரன். அதன்தான், அய்லாம் தன்மையுடைய பொருந்தாத பரத் தமையினையும் உடையவன் என்பதைக் கண்டிருந்தும், நீதான் அவன்பால் ஊடல்கொள்ளாய் என்கின்றன!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/174&oldid=774172" இலிருந்து மீள்விக்கப்பட்டது