பக்கம்:நற்றிணை-2.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதாழி ைெடக்காடனிை. நற்றிணை தெளிவுரை 241 பாதுகாத்துப் பண்டுபோற் பேணுது, விட்டு நீங்கிப் புதியரை நாடுபவன் நீ என்று இடித்துக் கூறியதாம். விளக்கம் : நின்னை நயந்தோர் மலர் தீய்ந்தனையர் என்றது, இயல்பான முதுமையை அடையாத பெண்களையும், நீதான் இளமையிலேயே துறந்து கைவிட்டுச் சென்று, வாடி உயிர் அழியச் செய்யும் தன்ம்ை உடையை என்று சொல்லிப் பழித்ததாம். இவளும் அத்தன்மையள் ஆயினுள் என்று அருள்தோன்றக் கூறியதும் ஆம். தலைவனின் காமக் கிழத்தி இவ்வாறு கூறுவது, அவளுக்கு அவன்பாலுள்ள பழைய தொடர்பையும், உரிமையையும், அக் குடும்பத்தின்பால் அவளுக்குள்ள நல்லெண்ணத்தையும் புலப்படக் காட்டுவ தாகும். பெருந்தெய்வம் என்றது. பரசிவத்தை என்பர். பயன் : ஊடல் தீர்ந்து கூடி முயங்கி இன்பம் காண்பர் என்பதாம். - - மேற்கோள் : "இதனுள் மூத்து வினைபோகிய அம்பி போலப் பருவஞ்சென்ற பிணிக்கப்பட்ட எம்மைப் போலாது, இவள் இப்பருவத்தே இளையளாகற் பாலளோ, மலர்ந்த செவ்வியான் முறைiயாய்க் கழியாது இடையே எரிந்து கரிவுற்ற பூவினைப் போல’ எனத் தலைவனுக்குக் காமக்கிழத்தி கூறியவாறு காண்க' என்ற விளக்கத்துடன், இச்செய்யுளை, ‘புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணும் என்னும் சூத்திர உரைக் கண் எடுத்துக்காட்டுவர் நச்சினர்க்கினியர். (தொ.பொ. 41.). பாடபேதம் : மலர்தீர்ந்தனையர். 316. மேகம் மடமையுடையது! - பாடியவர் : இடைக்காடனர். திணை : பாலை. துறை : பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது. - ((து - வி.) தலைவனைப் பிரிந்த பிரிவுத் துயரத்தால் தலைவி. யின் மன்த்துயரம் பெரிதாகியது. அவள் பெரிதும் நலிவடை கின்ருள். அவள் துயர்நிலை நிலைகண்டு மனம் வருந்தினள் தோழி. தலைவிக்கு அவள் தேறுதல் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) மடவது அம்ம மணிகிற எழிலி மலரின் மெளவல் நலம்வரக் காட்டிக் கயலேர் உண்கண் கணங்குழை இவைகின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/245&oldid=774250" இலிருந்து மீள்விக்கப்பட்டது