பக்கம்:நற்றிணை-2.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 நற்றிணை தெளிவுரை டிேருஞ் சிலம்பில் பிடியொடு புணர்ந்த பூம்பொறி யொருத்தல் ஏந்துகை கடுப்பத் தோடுதலை வாங்கிய டுேகுரல் பைந்தினை பவளச் செவ்வாய்ப் பைங்கிளி கவரும் உயர்வரை நாடநீ நயந்தோள் கேண்றை 5 அன்னை அறிகுவள் ஆயின்-பனிகலந்து என்ன குவகொல் தானே-எங்தை ஓங்குவரைச் சாரல் தீஞ்சுனை யாடி ஆயமொடு குற்ற குவளை, - மாயிதழ் மாமலர் புரைஇய கண்ணே. 10 தெளிவுரை : நெடியதும் பெரியதுமான மலைப்பக்கத்திலே, பிடியானையோடும் கலந்த, முகத்திலே புள்ளிகளையுடைய அழ்கிய களிற்று யானையினது தூக்கி எடுத்த துதிக்கையைப் ப்ோல, மேலிலை நீங்கிய நீண்டு வளைந்த பசிய தினையின் கதிர்கள் வளைந்து விளங்கும். பவளம்போலச் சிவந்த வாயை யுடைய பசுங்கிளிகள், அக்கதிர்களைக்செய்துகொண்டும் போகா நிற்கும். அத்தன்மை கொண்டதான உயர்ந்த மலைநாட்டிற்கு உரியவனே! நீதான் விரும்பிக் காதலித்தவளாகிய தலைவியது நட்பினை அன்னையும் அறிந்தாளானல் எம் தந்தையது உயரமிகுந்த மலைச்சாரலிடத்தே உள்ள தான, இனிய சுனை நீரிலே நீராடினமாய், தோழிப் பெண் களோடும், அச்சுனையிடத்தே பறித்த குவளை மலரின், கரிய இதழ்கள் கொண்ட சிறந்த மலரைப்போல விளங்கும் எம் கண்கள்தாம், . கண்ணிர் கலந்து வடியப் பெறுவதாகி, இனி என்ன கேட்டைத்தான் அடையுமோ? கருத்து : நின்னைக் கண்டு மகிழ்கின்ற எம் கண்கள் நலனழியாத வகையில், நீதான் மணந்துகொண்டு அருள வேண்டும் என்பதாம். சொற்பொருள் : நீடிருஞ் சிலம்பு - நெடிதும் பெரிதுமான மலைப்பகுதி. ஒருத்தல் - தலைவனகிய களிறு. தோடு - மேலிலை; கதிரை மூடியிருக்கும் இவ்விலைகளைத் தோடு என்பதே இன்றும் மரபாகும். ப்ொறி - புள்ளிகள். ஏந்துகை - மேலாக ஏந்திய கை தோடு நீங்கிய தினக்கதிரின் தோற்றத்திற்கு உவமை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/248&oldid=774253" இலிருந்து மீள்விக்கப்பட்டது