பக்கம்:நற்றிணை-2.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

برای م یا o که از ده تا m که یه ای صا ویچ نیوc سید و تم ننجٹسس سے தற்றிணை தெளிவுரை - مه ها وم ميو دو صا " . கருத்து : "இவன் ஒருவனே அவளுக்குக் கைப்பற்றுத ற்கு எளியனவான்' என்று, அவனது பரத்தமை குறித்து எள்ளி நகையாடியதாம். சொற்பொருள் : விழவு ஊர் விழவு. தழை - தழையுடை. அலமரல் - அசைதல். இளையோள் - இளையவளான பரத்தை; அலமரும் அல்குல் இளையோள் என்றது அவள் அசைந்தசைந்து நடந்து சென்ற ஒயிலைக் கூறியது. பழவிறல் பழமையான வெற்றிச் சிறப்பு. ஒரு பெருந்_தெரு - ஒப்பற்ற பெருந் தெரு. என்றது, அரசனின் கோயில் இருந்த அரச வீதியை நேரார் . பகைவர். புலம் போல் - புலப்பும் போல். பேரிரைச்சல் போல். காரி புகுந்ததும் ஒரியின் கூட்டத்தார் நகையாடிப் பேரார வாரம் செய்தது, அவன் ஓரியை வஞ்சித்துக் கொன்றதன் மறமாண்பற்றதான செயலைக் கருதியாம். விழும்ாந்தனர் - றப்பு அடைந்தனர்; நன்மை அடைந்தனர்; அவளைக் கண்டு மயங்கிப் பின்போகாதபடி தம் கொழுநரைக் காத்துக் கொண்டனர். - விளக்கம் : காளிகோயில் விழாநாளில் இன்றும் வேப்பந் தழையாடை அணிந்தபடி மகளிர் வீதிவலம் வந்து பணிவது மரபு: இதே மரபு பண்டும் இருந்தது. ஆனல், அவள் விழா விழந்த நாளில் தழையுடை உடுத்துத் தெருவில் வந்த்து ஆடவரை மயக்கித் தன் வலைப்படுத்துதற்கே என்பதாம். மாதர் பலரும் தத்தம் கொழுநரைக் காத்துக் கொண்டனர்; எவரானும் காத்தற்குரிய தகையற்ற இவன் அவள் வலைப்பட்டு அவள்பின் போயினன் என்றதாம். இதல்ை, அவளைப் பழித்த தோடு, தலைவனின் கட்டவிழ்ந்த பொறுப்பற்ற தன்மையையும் எள்ளி நகையாடினள் என்று கொள்ளுக. முழவும் தூங்கின்று' என்றது விழாவில் முழங்கிய அதுவும், விழா முடியவும் செயலற்றுக் கிடந்தது என்பதாம். அதற்குரிய இடத்தில் தொங்கவிடப் பெற்றிருந்தது எனலும் ஆம். - இதல்ை, பரத்தை தன் அயர்வு தீர்வாள் என்று கூறலாம். பயன் : அவள் மயக்கிலே மயங்கிக் கிடக்கும் தலைவன் மயக்கம் தீர்ந்ததும் அவள்பால் மீள்வான் என்பதாம். 321. வறுமனே நோக்கி வருந்துவளோ! பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழார் மகளுர் மள்ளனர். திணை : முல்லை. துறை : வினை முற்றி மீள்வான் தேர்ப் பாகற்குச் சொல்லியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/255&oldid=774261" இலிருந்து மீள்விக்கப்பட்டது