பக்கம்:நற்றிணை-2.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 நற்றிணை தெளிவுரை விழவும் உழந்தன்று முழவும் தூங்கின்று எவன்குறித் தனள்கொல் என்றி யாயின் தழையணிந்து அலமரும் அல்குல் தெருவின் இளையோள் இறந்த அனைத்தற்குப் பழவிறல் ஒரிக் கொன்ற ஒருபெருங் தெருவிற் 5 காரி புக்க நேரார் புலம்போல் கல்லென் றன்ருல் ஊரே அதற்கொண்டு காவல் செறிய மாட்டி ஆய்தொடி எழில்மா மேனி மகளிர் விழுமாங் தணர்தங் கொழுநரைக் காத்தே. 10 தெளிவுரை : தோழி! ஊரிடத்தே நிகழ்த்தப்பெறும் திருவிழாவும் நிகழ்ந்து முடிந்தது. விழாவின் பொருட்டாக முழங்கிய முழவுகளும் ஒய்ந்து கிடக்கின்றன. இக் காலத்தில், இவள்தான். யாதனைக் கருதினளோ? என்று கேட்பாயானல், ಕಿಡಿಮಿಷ; கேட்பாயாக : ஒருநாள் உடுக்கும் தழையுடையை அணிந்தபடியே, அவ் வுட்ை அசைந்தாடும் அல்குலை உடையவளாக, இவ்விளையோள் தெருவிடத்தே நடந்து சென்றனள். அந்த ஒன்றினுக்கே பழமையாகிய வெற்றிச் சிறப்பையுடையவன் வல்வில் ஒரி என்பவன். அவனைக் கொன்றவன் திருமுடிக்காரி என்பவன். கொன்றபின், அவ் ஒரியது ஊரிடத்து ஒப்பற்ற பெருந்தெருவி னுள்ளே புகுந்தனன் காரி. அவன் புகுந்ததைக் கண்டதும், அவன் பகைவராகிய ஒரியைச் சார்ந்தோர் பலரும் ஒருசேரப் பேரிரைச்சல் இட்டனர். அவ்வொலிபோன்ற பெருநகைப்பின் ஒலியும் ஊரிடத்தே அப்போது உண்டாயிற்று. அந் நகையொலியைக் கேட்டனர் ஆராய்ந்தணிந்த வளைகளை யுடையவரும், அழகிய மாந்தளிரின் வனப்பமைந்த மேனியை யுடையவருமான அவ்வூர் மாதர்கள், இவள் நம்முடைய கேள்வரையும் கைப்பற்றிக்கொண்டு செல்லாநிற்கும் என்று எண்ணி அஞ்சினர். தம்தம் கொழுநரைக் காவலிட்டுச் செறிப்புச் செய்து பாதுகாத்துக்கொண்டு நன்மை அடைந் தனர். அங்ங்ணம், அவரவர் தத்தம் கொழுநரைப் பாதுகாத்துக் கொண்டதனலே, இவள் செயல் பயன்பட்ாமற் போயினத்ளுற் போலும், இவனைக் கைப்பற்றிக்கொண்டு அகன்றனள், காண் பாயாக! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/254&oldid=774260" இலிருந்து மீள்விக்கப்பட்டது