உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

நற்றிணை தெளிவுரை


வார் செய்து வரும் பலியிடு முறையாற் காணலாம். வேலன் – பூசாரி; வேலை நட்டு வழிபாடாற்றுவோன் வேலன் எனப்பட்டனன்.

பயன் : வேலன் வெறியாடி உண்மை கூறின், களவுறவு வெளிப்பட, இற்செறிப்புக் கடுமையாகும்; ஆகவே விரைவில் மணவினை முடித்தலே தக்கதெனத் தலைவன் துணிவான் என்பதாம்.

323. புலிவரி எக்கர்ப் புன்னை!

பாடியவர் : வடமவண்ணக்கன் பேரிசாத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : தோழி இரவுக்குறி நேர்ந்தது.

[(து-வி.) தலைவனும் தலைவியும் பகற்போதில் சந்தித்து மகிழ்தற்கு இயலவில்லை. தலைவன் இரவுக்குறியை விரும்புகின்றான். அதற்கு உடன்பட்ட தோழி, அவர்கள் சந்திப்பதற்கு ஏற்றதான இடத்தைக் குறிப்பிட்டுக் கூறுகின்றாள்.]


ஓங்கித் தோன்றும் தீங்கள் பெண்ணை
நடுவண் அதுவே தெய்வ மடவரல்
ஆயமும் யானும் அறியாது அவணம்
ஆய நட்பின் மாணலம் ஒழிந்துநின்
கிளைமை கொண்ட வளையார் முன்கை 5
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்
புலிவரி எக்கர்ப் புன்னை உதிர்த்த
மலிதாது ஊதும் தேனோடு ஒன்றி
வண்டின் இன்னிசை கறங்கத் திண்தேர்த்
தெரிமணி கேட்டலும் அரிதே 10
வருமாறு ஈதவண் மறவா தீமே.

தெளிவுரை : எம்மைப் போலும் மடப்பம் வருதலையுடைய ஆயமகளிரோடும் கொண்ட நட்பாகிய மாட்சிமையுடைய நன்மையினையும் ஒழிந்துபோகக் கைவிட்டாள் அவள். நின் உறவையே பெரிதானதாகப் போற்றிக் கொண்டாள். வளைகள் ஒலி முழங்கும் முன்னங்கையினளான நல்லோளாகிய நின் காதலியின் நிலைமை இது. அவள் தந்தையது சிறுகுடியையுடைய பாக்கமானது, இனிய கள் வடிதலையுடைய அதோ உயர்ந்து தோன்றுகின்ற பனைமரங்களின் நடுவே உளதா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/262&oldid=1680399" இலிருந்து மீள்விக்கப்பட்டது