பக்கம்:நற்றிணை-2.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(=-ちヘッs લGજઃ જજ પ્રrsms جيه ديو دعا * ككهومهم لإي تينية ウッ ofta - ', * நற்றிணை தெளிவுரை 26i உறிஞ்சி இழுக்கும். உள்ளத்தைச் செலுத்துதற்கும் அரிதான கவர்த்த அத்தகைய அறந்ெறியினைக் கடந்து செல்ல நினைப் பதை நீர் தவிர்வீராக! கருத்து : நீர் பிரியின் இவள் அழிவாள்' என்பதாம். சொற்பொருள் : கவிதலை - கவிந்துள்ள தலை. எண்கு - கரடி. ஏற்றை - ஆண்கரடி. வேட்கை - ஆர்வம். சிதலே - கரையான். தோடு - கரையான் கூட்டம். புனைந்து - செய லாற்றி. எடுத்த - உயர்த்த. அர - அரா: பாம்பு. முர வாய்முறிந்த வாய், வாய் . முன் பகுதி. கவலை - கவர்த்த வழி. பூ - கருங் குவளைப் பூ. இறைச்சி : இரை தேடியுண்ணும் ஆர்வத்தாலே, கரடி புற்றைப் பெயர்த்து ரவில் உண்ணும் காடு என்றனள். இவளது காமவேட்கை நின்னை நாடிச் சேரும் ஆர்வத்தாலே இவள் அரிய உயிரையே உண்டு ஒழித்துவிடும் என்பதாம். விளக்கம் : கரடியின் பசிவேட்கை, கரையான் கூட்டம் நெடிது முயன்று உயர்த்திய புற்றுக்கும், அவற்றின் முட்டைக் கும், அவற்றுக்கும் அழிவை உண்டாக்குவதுபோல, நின்னது பொருள் வேட்கை, நெடிது முயன்று அமைத்த நின் இல்லற வாழ்வுக்கும், அதனை அமைத்த நின் துணைவியான இவளுக்கும் அழிவைத் தரும் என்பதாம். அரவாழ் புற்றம்' என்றது. கரையானின் புற்றில் ஒடுங்கியிருந்த அரவும் ஒழியுமாறுபோல, தலைவியின் அழிவால் அவளது தோழியராகிய்யாமும் வருந்தி நலிவோம் என்பதாம். இதனைக் கேட்டல் உறுபவன், தன் செலவை நிறுத்தி வைப்பான் என்பதாம். "உகுநீர் புதுநலம் சிதைய வாரக் கண்டும் தகுமோ பெரும! தவிர்க நும் செலவே' என்பது, தலைவியின் கவ்ல்ை மிகுதியைப் புலப்படுத்திச் செலவைக் கைவிடுமாறு கேட்பதாகும். பயன் : தலைவன், தன் பிரிவைச் சிறிது நாள் தள்ளிப் போடுதலும் நேரலாம் என்பதாம். 326. தும்மும் மந்தி: பாடியவர் : மதுரை மருதன் இளநாகனர். திணை : குறிஞ்சி. துறை : தோழி தலைமகனை வரைவு கடாயது. ((து-வி.) களவு வாழ்வே இனிதென மயங்கி, வரைந்து மணங் கொள்ள நினையாதாளுய் வந்து ஒழுகும் தலைமகனின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/265&oldid=774272" இலிருந்து மீள்விக்கப்பட்டது