பக்கம்:நற்றிணை-2.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

rpgاده ۸ داده f es৯৫৬৩ اليه خوه - 坐> تنش بسیار 270 )מהמ f\ - நற்றினை தெளிவுரை 330. உண்மையோ அரிதே!. பாடியவர் : ஆலங்குடி வங்களுர் திணை : மருதம். துறை: தோழி தலைமகனை வாயில் மறுத்தது. ((து - வி.) பரத்தையை நாடிப் போன தலைவனுக்கு: மீண்டும் தலைவியின்பால் ஆர்வம் உண்டாகிறது. அவன் வீட்டிற்கு வந்து, தலைவியின் இசைவைப் பெற்றுத் தருமாறு தோழியை வேண்ட, அவள் அவ்ன் போக்கைக் கடிந்து மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) - தடமருப்பு எருமைப் பிறழ்சுவல் இரும்போத்து மடகடை நாரைப் பல்லினம் இரிய நெடுநீர்ந் தண்கயம் துடுமெனப்பாய்ந்து நாள்தொழில் வருத்தம் விடச் சேட்சினை இருள்புன மருதின் இன்னிழல் வதியும் 5 யாணர் ஊர! நின் மாணிழை மகளிரை எம்மனத் தந்து தlஇயினும், அவர்தம் புன்மனத்து உண்மையோ அரிதே அவரும், பைக்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து நன்றி சான்ற கற்போடு 10 எம்பா டாதல் அதனினும் அரிதே' தெளிவுரை : வளைந்த கொம்புகளையுடைய எருமையின், அசையும் பிடரினையுடைய கருமையான கடா ஒன்று, இள நடையையுடைய நாரைகளின் பலவான கூட்டம் எல்லாம் அச்சமுற்று ஒடும்படியாக, நெடிய நீர் நிரம்பிய தண்ணென்ற பொய்கையிலே, துடுமென்னும் ஒலியுண்டாகச் சென்று பாய்ந்து, நாளிற் செய்த உழு தொழிலின் வருத்தமானது நீங்கும் படியாக நீராடும். அதன்பின் நீண்ட கிளைகளை உடையதும், இருள் நிரம்பியது போன்ற அடர்த்தியுடையதுமான மருதம்ரத் தின் இனிய நிழலிலே சென்று ஒய்வாகத் தங்கியிருக்கும். அத்தகைய புதுவருவாய் மிகுந்த ஊரினை உடைய்வனே!நீதர்ன், நின்னுடையவரான மாட்சிகொண்ட கலனணிந்த பரத்தை மகளிரை, எம்முடைய வீட்டுக்கே அழைத்து வந்து வைத்து, குலமகளிரைப் போலப் பேணிக்கொண்டு அவரோடு கூடியிருந் தாலும், அவர்களது புன்மையான மனத்திலே உண்மையான காதலன்பு:நின்னிடத்து உண்டாதல் என்பதோ அரிதேயாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/274&oldid=774290" இலிருந்து மீள்விக்கப்பட்டது