பக்கம்:நற்றிணை-2.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - - - 269 போல, தலைவரும் தாம் தேடிய் பெரும் பொருளோடு வந்து நம்மை வரைந்து மணந்து இன்பம் தருவர் என்பதாம். ... " சொற்பொருள் : வரையா - எ ல் லையற் ற. நயவினர் . நன்மையுடையவர்; நன்மையாவது நற்பண்பு. நிறையம் " நரகம்; இங்கே நரகம் உய்த்தற்குரிய தீவினை. அடுபிணன் கொலைப்பட்டுக் கிடக்கும் அழுகற் பிணம். மருங்கு - பக்கம்" நிரை கதித்த பொறிய - வரிசையாகத் தோன்றிய புள்ளிகளைக் கொண்ட பாறு - பருந்து. புடைத்தல் - அடித்துக்கொள்ளல். இற்ற - உதிர்ந்து வீழ்ந்த வன்கண் ஆடவர் - வன்கண்மை யுடைய ஆறலை கள்வர். ஆடு - வெற்றி. அதர் - வழியிடம். அல்கும் - தங்கியிருக்கும். - , இறைச்சிப் பொருள்: 1) ஈன்றணிமையுடைய பருந்து பசியர்ல் மிகத்துன்புற்றபோதும், அழிந்த பிணத்தினின்றும் எழுந்த முடைநாற்ற மிகுதியினலே, நெருங்கித் தின்ன மாட்டாதும், விட்டுப்போக மனமின்றியும் சிகறடித்து வருந்தும் என்றது, நின்பால் தோன்றும் பசலையானது, அவர் குறித்த நாளிலே வருதல் மெய்ம்மையாதலின், தாம் அகன்று போதல் நேருமென வருந்தியிருக்கும் என்றதாம். - 2) கணைசெறித்த ஆடவர் வெல்லும் கருத்துடன் நெறிபார்த்துத் தங்கியிருப்பர் என்றது, கொடுமையுடைய அல்ர்வாய்ப்பெண்டிர் நின்னைத் தூற்றி, மகிழும் கருத்தோடு நின் சோர்வு பார்த்துக் காத்திருப்பர் என்பதாம். விளக்கம் : வன்கண் ஆடவர் அதர்பார்த்து அல்கும் அத்தம் இறந்தனர் ஆயினும், நம் தலைவர் வரையா நயவின்ர் ஆதலின், ஊறு ஏதுமின்றிக் குறித்த காலத்தில் தவருதே வந்து நின்னை மணங்கொண்டு இன்புறுத்துவர் என்பதாம். வரையா நயவின் நிரையம் பேணுர்’ என்பதற்கு, நயமான எந்தவொரு செயலையும் கருத்துட் கொள்ளாரும், நரகம் புகுதல் தீவினையால் நேரும் என்பதைக் கருதாதவருமான வன்கண் ஆடவர் என்றும் பொருள் கொள்ளலாம். செல்லுங் காலைப் பொருள்மிகுதியின்மையால் கள்வர் கொடுமைக்கு அஞ்சவேண்டா, வருங்கால அஞ்சுதல் வேண்டும் என்பது நின்ைந்தும் அங்கேயே தங்கிவிடார், நின்னைத் துறந்து இருந் தற்கு இயலாராதலின் என்று, அவனது காதலன்பின் மிகுதி யையும் ஆண்மையையும் கூறியவாறும் ஆம். பயன் : தலைவி, தலைவன் வரைபொருளோடு மீண்டு வரும் காலம்வரை பிரிவைப் பொறுத்து ஆற்றிருப்பாள் என்ய தாம.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/273&oldid=774288" இலிருந்து மீள்விக்கப்பட்டது