பக்கம்:நற்றிணை-2.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

さ & نومaه لا فمنه هد کیم دع f كفـ rరాణా t శీడా كاهي 272 நற்றிணை தெளிவுரை தாரைப் போலக் குலத்துக்குச் சிறிதளவும் பயன்படார் என்றும் தலைவனுக்குச் சொல்லி, அவனைப் பழிக்கின்ருள் தோழி. - ~ பயன் : வாயின் மறுத்தலே துறையாயினும், தலைவன் தன் குற்றமுணர்ந்து வருந்த தலைவியும் அவனை ஏற்றுச் கொள்வாள் என்பதாம். 331. முனிவில் நல்லூர்! பாடியவர் : உலோச்சனர். திணை : நெய்தல். துறை : தோழி இரவுக்குறி நேர்ந்தது. (து - வி.) பகற்குறி வந்தொழுகும் தலைவனின் உள்ளத் தில்ே தலைவியை மணந்து கொள்ளும் நினைவைத் தீவிரமாக்கக் கருதுகின்ருள் தோழி. ஆதனுல், பதற்குறி மறுத்து இரவுக்குறி நேர்வாள் போல்ச் சொல்லுகின்ருள். அவ்வாறு தோழி சொல்வ தாக அமைந்த செய்யுள் இது.) உவர்விளை உப்பின் உழாஅ உழவர் ஒழுகை உமணர் வருபதம் நோக்கி, கனல் இட்ட காவற் குப்பை புலவுமீன் உணங்கல் படுபுள் ஒப்பி, மடநோக்கு ஆயமொடு உடனூர்பு ஏறி, 5 'எந்தை திமிலிது நுங்தை திமிலென வளைநீர் வேட்டம் போகிய கிளைஞர் திண்திமில் எண்ணும் தண்கடற் சேர்ப்ப! இனிதே தெய்யனம் முனிவில் கல்லூர்: ' 10 இனிவரின் தவறும் இல்லை; எனயது உம் பிறர் பிறர் அறிதல் யாவது தமர்தமர் அறியாச் சேரியும் உடைத்தே. தெளிவுரை : புலவு நாற்றத்தை உடைய மீனை உப்பிட்டு காயவைத்திருக்கும் பொழுது, அதனைக் கவர்தற்கு வந்து வீழும் புள்ளினங்கள்ை ஒட்டியபடி இருப்பர் பரதவர் மகளிர். மடப்பம் பொருந்திய பார்வையினைக் கொண்ட அவர்கள், தம் தோழிய ரோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/276&oldid=774295" இலிருந்து மீள்விக்கப்பட்டது