உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

நற்றிணை தெளிவுரை


இத்துடன் உறுபுலி பார்க்கும் களிறும் உடைத்தாதலால், இரவில் தனியே வழி வருவார்க்குத் தீங்கு நேருமென அஞ்சுதல் இயல்பே என்பதும் தெளிவாகும்.

பயன் : இரவின் வழி ஏதத்துக்கு அஞ்சுவதுபற்றிக் கூறுதலால், இனி இரவுக்குறியும் வாயாது என்பதை உணரும் தலைவன் தலைவியை வரைந்து வந்து மணந்துகொண்டு பிரியா இன்பம் நுகர்தலிலேயே மனம் செலுத்துவான் என்பதாம்.

337. சிறந்தார் மறந்தாரோ?

பாடியவர் : பாலை பாடிய பெருங்கடுங்கோ.
திணை : பாலை
துறை : 1. தோழி, தலைமகன் பொருள்வயிற் பிரியலுற்றானது குறிப்பறிந்து விலக்கியது; 2. தோழி உலகியல் கூறிப் பிரிவு உணர்த்தியதூஉம் ஆம்.

[(து-வி.) 1. பொருள் தேடிவரப் பிரிந்து போவதற்குத் தலைவன் திட்டமிடுவதைக் குறிப்பால் அறிந்து, தோழி அறநெறி கூறிப் போகாது தடுத்து நிறுத்தியது; 2. தலைவன் பிரிந்து செல்வது உலகியல் அறத்தோடு பொருந்துவதே; ஆயின் அடைந்தாரைக் காப்பதும் வேண்டும் என்று தலைவனிடம் கூறித் தோழி உலகியல் உணர்த்தியதும் ஆம்.]


உலகம் படைத்த காலை—தலைவ!
மறந்தனர் கொல்லோ சிறந்தி சினோரே!
முதிரா வேனில் எதிரிய அதிரல்
பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர்,
நறுமோ ரோடமொடு உடனெறிந்து அடைச்சிய 5
செப்பிடந்து அன்ன நாற்றம் தொக்குஉடன்,
அணிநிறம் கொண்ட மணிமருள் ஐம்பால்
தளர்நறுங் கதுப்பில் பையென முழங்கும்
அரும்பெறற் பெரும்பயம் கொள்ளாது,
பிரிந்துறை மரபின் பொருள்படைத் தோரே. 10

தெளிவுரை : தலைவனே! முற்றாத இளவேனிற் காலத்தினை எதிர்நோக்கிய காட்டு மல்லிகை மலரையும், பருத்த அடியையுடைய பாதிரியின் நுண்மயிர் கொண்ட சிறந்த மலரையும், நறுமணம் கமழும் செங்கருங்காலியின் மலரோடு ஒன்றாகச் சேர்த்து அடைத்து வைத்துள்ள செப்பினைத், திறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/290&oldid=1681329" இலிருந்து மீள்விக்கப்பட்டது