பக்கம்:நற்றிணை-2.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 - நற்றிணை தெளிவுரை சாடிய சாந்தினை, ೧Tyು. கோதையை: ஆசில் கலந்தழி இயற்று; வாரல்; வாழிய, கவைஇ கின் ருேளே! 10 தெளிவுரை : வெள்ளை நெல்லை அரிபவர்கள் முழக்குகின்ற தண்ணுமையின் ஒலிக்கு வெருவிப், பழனத்திடத்தேயுள்ள பலவான புள்ளினங்களும் கழனியிடத்தேயாக வளைந்திருக்கும் கிளைகளைக்கொண்ட மருதமரத்தின்மீதே சென்று சேர்தலால், அதனிடத்தேயுள்ள தொங்கும் பூ, ங் கொத் து க்க ள் கழ்னியிடத்தே உதிரும். இத்தகையதும், இரவலருக்குத் தேர்களையே வழங்கும் வண்மையுடைய விராஅனுக்கு உரியதும், இருப்பையூர் ஆகும். அதனைப் போன்று, என் பழைய கவின் முற்றத் தொலைவதாயினும் தொலைவதாகுக, நின் னை என்னருகே நெருங்கவே விடமாட்டேன். அங்ங்ணம் நெருங்க விடுவேனுயின் தாவி என்னை மார்பகத்தேயிடும் நின் கைகளோ விலக்குதற்கு இயலாதவாறு தடுத்து என்னைத் தான் தாங்கும் வன்மை உடையன. பரத்தையின் குவிந்த முலைகளாலே மோதப்பெற்ற சந்தனத்தையும் நீ நின் மார்பிலே உடையை. அவளோடு தழுவிக் கிடத்தலாலே வாடிப்போன கோதையினை யும் பெற்றுள்ளன._ஆதலாலே, நின்னைத் தழுவுதல் என்பது, கழித்துப் போடப்பெற்ற கலங்களைத் தொடுவதற்கே எமக்கு ஒப்பானதாகும். ஆகவே, எம் மனையிடத்துக்கு வாராதே கொள். நின்னைத் தழுவி நின்றவளான அந்தப் பரத்தையும், நின்னேடு கலந்து மகிழ்ந்தாளாய் நெடுநாள் வாழ்வாளாக! கருத்து : அவனைப்பற்றிய குறையை மனந்திறந்து சொல்லித் தன் சினம் தீர்ந்தவள், ஊடல் தீர்ந்து, அவனை ஏற்பாள் என்பதாம். சொற்பொருள் :- வெண்ணெல் - வெள்ளை ஆரிசியுடைய நெல். அரிநல். அரிதல் மேற்கொள்வார். வெரீஇ . அஞ்சி. இரிய - அஞ்சி அகல. வாங்குசினை - வளைந்துள்ள கிளை. தூங்கு துணர் - தொங்கும் பூங்கொத்து. தேர்வண் - தேர் வழங்கும் வ ண் ை *ಶ್ಗ - இருப்பையூர். கடைஇ- சொல்லி. சாந்து - சந்தனத் தேய்வை. கோதை - மாலை. ஆசுஇல் கலம் - கழித்துப்போட்ட பழங்கலம்; இதனைத் தொடுவதும் தகாது என்பது மரபு. கவ்ைஇ - தழுவி. உள்ளுறை : மள்ளர் முழக்கும். தண்ணுமை ஒலிக்கு அஞ்சிய புள்ளினம் செறிதலால், மருதின் கிளையிலுள்ள பூங் கெர்த்துக்கள் உதிரும் க்ழனியில் என்றனள்: என்பால் நினக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/316&oldid=774386" இலிருந்து மீள்விக்கப்பட்டது