பக்கம்:நற்றிணை-2.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 நற்றிணை தெளிவுரை

இன்பமே தந்த எம்மை நீ வெறுத்து ஒதுக்குவது நின் சால்புக்கு ஒவ்வாதது என்று கடிந்து கூறி அறிவுறுத்தியதுமாகும்.

‘தோள் துயில் நெஞ்சின் இன்புறாய் ஆயினும்’ என்றதனால், இடையிலே அவன் நாட்டம் பிறிதின்மேற் செல்ல, நொந்து, தோழி கூறியதாகவும் கொள்ளலாம்.

‘முந்தையிருந்து...' என்னும், இரண்டடிகளும் பெருங் கதையிலும் எடுத்தாளப் பட்டுள்ளது. நஞ்சும் என்பதில் வரும் உம்மையால் அவர் ஒருபோதும் நஞ்சைத் தரமாட்டார் என்பதும் விளக்கும். -

பயன் : தலைவன் விரைவிலே மணம்கொண்டு தலைவியின் துயரைப் போக்குவான் என்பதாம்.


356. கீழ்த்திசை வெள்ளி!

பாடியவர் : பரணர். திணை : குறிஞ்சி. துறை : வரைவு மறுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன், தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

[(து-வி.): தலைமகன், தன் காதலியைத் தனக்கு மணம் பேசி வருமாறு சான்றோரை அனுப்புகின்றான். தலைவியின் தமரோ அவனுக்கு அவளைத் தர இசையவில்லை. அவர் வந்து அந்த மறுப்பைச் சொல்லியதும், தலைவன் மனம் நொந்து வருந்துவதாக அமைந்த செய்யுள் இது.]

நிலந்தாழ் மருங்கில் தெண்கடல் மேய்ந்த விலங்குமென் தூவிச் செங்கால் அன்னம் பொன்படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி வானர மகளிர்க்கு மேவல் ஆகும் வளராப் பார்ப்பிற்கு அல்கிரை ஒய்யும் 5 அசைவில் நோன்பறை போலச் செல்வர வருந்தினை-வாழியென் உள்ளம்! -ஒருநாள் காதலி உழையள் ஆகவும், குணக்குத் தோன்று வெள்ளியின், எமக்குமார் வருமே!

தெளிவுரை : என் உள்ளமே! நிலத்திடத்தே தாழ்வாக உள்ள பக்கத்திலேயுள்ள, தெளிந்த கடலிடத்தே சென்று இரைமேய்ந்த, விலகிய மென்மையான இறகையுடையதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/328&oldid=1405265" இலிருந்து மீள்விக்கப்பட்டது