பக்கம்:நற்றிணை-2.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 . . நற்றிணை தெளிவுர்ை கொண்ட சந்தனப் பூச்சோடு, நறிய குளிர்ச்சியமைந்தவனயும் மீண்டு வருகின்றனன், இதற்கு யானும் நோவேனே? மகிழவே செய்வேன். அவன் வாழ்வாகை என்பதாம். கருத்து: இனித் தலைவியின் வருத்தம் தீரும் என்பதாம். சொற்பொருள் : அலந்தலை - வாடிப்போன குடிஞை - பேராந்தை. தெளிர்ப்ப - ஒலிப்ப. இழை - அணி, முரம்புமேட்டுநிலம். பனிக்கடுநாள். முன்பனிக் காலமாகிய ந்ாள். உறைத்தென - பெய்ததாக. தண் ணியன் - குளிர்ச்சியான பண்பினன்; தண்ணிய மலர்மாலை அணிந்தோனும் ஆம். விளக்கம் : அவன் பிரிந்து செல்லும்போது கானத்தி லிருந்த வெம்மையின் தன்மைபோலவே, அவன் உள்ளமும் துன்புற்றுக் கடுமையாகிக் கிடந்தது; இப்போது திரும்பிவரும் போது மழையிற் குளிர்ந்த கானம் போலவே தன் உள்ளமும் நம்பாலுள்ள காதல் நினைவால் குளிர்ச்சியாக உள்ளது என்பதாம். சாந்தம் குறும்பொறிக் கொண்டது மழைத்துளி வீழ்தலால் என்க. - o பயன் : இனித் தலைவியின் வேதனை அகன்று, அவளும் மனம் குளிர்வாள் என்பதாம், - இரண்டாவது துறை : குறிஞ்சித் திணையின்பாற் படும். இதற்கு முன்னர் என்னிடம் வந்து தன் குறைதீர்க்க வேண்டி இரந்து நின்று கையுறை தந்துவிட்டுச் சென்ற தலைவன். இன்று, இடைச்சுரத்தே மழை பெய்தாற்போலக் குளிர்ச்சி யோடு இன்று மீண்டும் வருகின்ருனே! யான் நேற்று வன்சொற் கூறி அவனைப் போக்கினதற்கு நோவேனே? இன்று அவன் தான் விரும்பியவாறு இன்புற்று மகிழ்வாகை என்று மகிழ்வேனே? யாது செய்வேன்? என்று கூறியதாகக் கொள்க. பயன் : தோழி, தானே தன்னுள்ளத்திற்குத் தலைவனின் காதலன்பைச் சொல்லி இவ்வாறு மகிழ்வாள் என்பதாம். 395. கலம் தந்து சென்மே. பாடியவர் : அம்மூவர்ை. திணை : நெய்தல். துறை : 'நலம் தொலைந்தது எனத் தலைவனைத் தோழி கூறி, வரைவு கடாயது. ((து - வி) தலமகன் வரைந்து வருவதற்குக் கருத் தின்றிக் காலம் தாழ்த்தாகை, களவு உறவையே விரும்பி வரக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/406&oldid=774588" இலிருந்து மீள்விக்கப்பட்டது