பக்கம்:நற்றிணை-2.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 405 ((து . வி.) வரைந்துகொள்வதற்கு நினையாதே களவு வாழ்வினை விரும்பி வருபவனைத் தோழி நெருங்கிச் சென்று, வரைந்துகொள்ளல் வேண்டும் என்பதனைக் குறிப்பாக உணர்த் தியது இது; (2) வரைவுடன் வரும் நாள் உணர்த்தப்பட்டும் அதுவன்ர அவனைக் காணமுடியாதுபோவதை நினைந்து பெருகிய ஆற்ருமையால் சொல்லிய்தும் இதுவாகலாம்; (3) இரவுக்குறி வருவான வாராதே என மறுத்துக் கூறுவதன்மூலம், வரைவு வேட்டலாகவும் கொள்ளலாம்.) பெய்துபோகு எழிலி வைகுமலை சேரத் தேன்துங்கு உயர்வரை அருவி ஆர்ப்ப வேங்கை தந்த வெற்பணி கன்னுள் பொன்னின் அன்ன பூஞ்சினை துழைஇக் கமழ்தாது ஆடிய கவின்பெறுதோகை * 5 பாசறை மீமிசைக் கணங்கொள்பு ஞாயிற்று உறு.கதிர் இளவெயில் உண்ணும் நாடன் கின்மார்பு அணங்கிய செல்லல் அருநோய் யார்க்கு நொந்து உரைக்கோ யானே-பன்னுள் காமர் கனிசொல் சொல்லி ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே! 10 தெளிவுரை : மழையைப் பெய்து கழித்த பின்னே செல்லும் மேகங்கள் தாம் தங்குவதற்கான மலையைச் சென்று சேர்ந்தன: தேன் கூடுகள் தொங்கும் உயர்ந்த வெற்பிடத் திருந்து வீழும் அருவிகள் ஆரவாரித்து வீழ்கின்றன. வேங்கை மலர்ந்ததனலே வெற்பிடம் அழகுடன் விளங்கும் நல்ல நாட் காலையிலே, பொன்போன்ற பூக்களையுடைய கிளையிலே துழாவி மணம் கமழும் மகரந்தத்திலே அளைந்து, அதனலே ப்ொற்கவின் பெற்றது மயில்; அது பசுமை போர்த்த பாறையின் உச்சிமீதிலே தன் கூட்டத்தோடுங் கூடியதாக, ஞாயிற்றின் மிக்க கதிர்ாகிய இளவெயிலைத் துய்த்தபடி இருக்கும்; இத் தகைமைகொண்ட மலைநாடனே! நின் மார் பானது தாக்கியதேைல நீங்குதற்கும் அரிதாகி எம்மைப் பற்றிக்கொண்டுள்ள இக் காமநோயின, மனம் நொந்து யானும் யாரிடத்துத்தான் சொல்வேனே? பலநாளும் இனிய சொற்களை மிகுதியாகச் சொல்லியதன்றி, மணவாழ்வே இவட்குக் காப்புடைத்தென்று அருளாதவன் ஆகி, நீதான் மயங்கியுள்ளனையே! இனி என்செய்வேம்? என்பதாம். கருத்து : நின் உறவாலே துன்புற்றனம் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/409&oldid=774594" இலிருந்து மீள்விக்கப்பட்டது