பக்கம்:நற்றிணை-2.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 நற்றிணை தெளிவுரை சொற்பொருள் : 'பெய்து போகு எழிலி' - பெய்தபின் மேலும் போகும் மேகம்; பெய்துகொண்டே செல்லும் மேகமும் ஆம். வைகுமலை - தங்கும் மலை. தேன் தூங்கு - தேன்கூடுகள் தொங்கும். வேங்கை தந்த வெற்பணி - வேங்கை மலர்ந்து அளித்ததான மலையின் அழகு. பூஞ்சினை - பூவினைக் கொண்ட கிளை. துழைஇ - துழைந்தாடி. கவின்பெறு தோகை - அழகு பெற்ற மயில்; இது வேங்கையின் பூந்தாது படிதலாலே பெற்ற புதிய கவின். பாசறை - பசுமையான பாறை; பசுமை மேலுள்ள செடிகொடிகளால் வந்தது. கணம் - கூட்டம். உறுகதிர் - மிகுந்த கதிர். உண்ணும் - துய்க்கும். அணங்கிய - தாக்கி வருத்திய செல்லல் - துன்பம்; நீங்குதலும் ஆம் காமர் - விருப்பந்தரும். நனி ச்ொல் . மிகுதியான் சொற்கள்' விளக்கம்: தலைவியைக் களவிற் பெறுகின்ற காலத்து, அவள்பால் அச்சம் தோன்ற, அதைத் தெளிவிக்கும் வகையால் “நின்னிற் பிரியேன்; நின்னையே விரைவில் மணந்து வாழ்வேன்; பிரியின் உயிர் தரியேன்" என்ருற்போலச் சொல்லிய சொற்களை நினைப்பிப்பாள், காமர் நனி செர்ல் சொல்லி என்றனள். அவை சொல்லளவாகவே பொய்ப்பட்டுக் கழிந்தன என்பாள், 'ஏமம் என்று அருளாய்' என்றனள். மயங்கினையே’ என்றது செய்வோமோ வேண்டாமோ என எதுவும் துணியாது குழம்பி யிருந்த மனநிலையை. மழை பெய்தலும், அருவி ஆர்த்தலும், மயில்கள் இளவெயில் நுகர்தலும், வேங்கை பூத்தலும் கூறியது, அதுதான் மணவினைக்கு உரிய காலம் என்பதை உணர்த்தி, அதனால் இனி வேற்றுவரைவும் பிற தொல்லைகளும் தம்மைச் சூழும் என்பதை நினைப்பித்ததுமாம். உள்ளுறை : மியிலானது வேங்கைத் தாதினை அளந்து வந்து தன். கூட்டத்தோடு சேர்ந்து இளவெயில் துய்க்கும் என்றது, நீதானும் இவளோடு மணம் பெற்றனையாய், நின் னுார்க்குக் கொண்டு சென்று, நின் தமரோடும் கூடியிருந்து, மனையறம் பேணி மாண்படைவாய் என்பதாம். பயன் : இதேைல மனம் தெளிபவன், விரைவிலே வரைந்து மணங்கொண்டு இன்புறுதற்கு முற்படுவான் என்பதாம். - பாடபேதம் : வேங்கை தந்த வெற்பணி நன்ள்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/410&oldid=774600" இலிருந்து மீள்விக்கப்பட்டது