பக்கம்:நற்றிணை-2.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 413 வாழை மென்தோடு வார்புறுபு ஊக்கும் நெல்விளை கழனி நேர்கண் செறுவின் அரிவனம் இட்ட சூட்டயல் பெரிய இருஞ்சுவல் வாளை பிறழும் ஊரே! கின்னின்று அமைகுவென் ஆயின் இவண்கின்று 5 இன்ன நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ? மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறம்கெட அறியா தாங்கு சிறந்த கேண்மையொடு அளைஇ ேேய கெடுவறி யாய்என் நெஞ்சத் தானே! 10 தெளிவுரை : வாழையின் மெல்லிய தாற்றின் நுனியிலே தொங்கும் பூவினை, அசையச் செய்கின்ற அளவுக்கு நெற்பயிர் ஓங்கி வளர்ந்திருக்கின்ற வயலிடத்தின், கண்ணுக்கு இனிதான சேற்றிலே, கதிரறுக்கும் உழவர்கள் அறுத்துப்போட்ட அரிச் சூட்டின் அயலிலே, பெரிய கரிய பிடரையுடைய வாளைமீன் பிறண்டபடி இருக்கும் வளமான ஊரனே! நின்னையின்றி யானும் இங்கே இருப்பேயிைன், இவ்விடத்திலே இருந்தும் இனிமை யன்றித் துயரமே விளைவிக்கும் நோக்கத்துடனே எனக்கு என்ன பிழைப்புத்தான் உண்டென்று சொல்வாய்? மறம் பொருந்திய சோழர்களது உறையூரின் அவைக்களத்தே அறமானது கெடுதல் என்பதை அறியாதாய் நிலைபெறுமாறு போலச், சிறந்த நட்புரிமையோடு அளவளாவி என்னை இன்புறுத்திய நீதான் என் நெஞ்சத்தினின்றும் நீங்குதல் அறிய மாட்டாய்காண்! கருத்து : அதனலே, விரைவிலே எனக்கும் வந்து அருள் செய்வாயாக’ என்று வேண்டினளாம். சொற்பொருள் : தோடு - தாறு; வாளையின் இலையும் ஆம்: அப்போது வளைந்து தொங்கும் வாழை இலையின் நுனியை உயர்ந்து வளர்ந்த நெற்பயிர் மோதி மோதி அசைக்கும் என்று கொள்க. செறு - சேறு. இருஞ்சுவல் - கரிய பிடரிப்புறம். இன்னநோக்கம் - துன்புறுவதான கருத்து: துன்புறுவது அவனைக் காணுமையால். அவை என்றது, உறையூர் அறமன்றின. அளைஇ . அளவளாவி மகிழ்ந்து..கெடு அறியாய்நீங்கற்கு அறியாய். - உள்ளுறை : வாழையின் தொங்கும் பூவை வளர்ந்துள்ள நெற்பயிர்கள் அசைக்கும் வுயலிலே, மள்ளர்கள் அறுத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/417&oldid=774614" இலிருந்து மீள்விக்கப்பட்டது