பக்கம்:நற்றிணை-2.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 நற்றிணை தெளிவுரை நிற்க. மாமலை - பெருமலை: கருமையான மலையும் ஆம். திருநுதல்-அழகான நுதல் சிறப்பு மிகுந்த நெற்றியும் ஆம். உள்ளுறை : பன்றிகள் கிளைத்த மணிகளின் ஒளியிலே கன்றின்ற பிடியானையானது, களிறு புறங்காப்பக் கன்றுடன் தங்கியிருக்கும் என்றது, நின்னை மலைநாடன் மணந்துகொண்டு இல்லறம் பேண, நீயும் புதல்வரையீன்று அவன் பாதுகாத்துப் பேண மகிழ்ச்சியோடு வாழ்பவளாவாய் என்பதாம். இறைச்சி : வண்டினம் வந்துண்டு மகிழுமாறு காந்தள் மலரும் என்றனள், இது அவன் வந்து இன்புற்று மகிழும் வண்ணம், நீதான் அவனை வெறுத்தொதுக்காதே அவனுடன் இசைந்து மனம் பொருந்தி இன்பந் தருவாயாக என்றதாம். விளக்கம் : காந்தள் மலர் வண்டுண்ண மலர்ந்து, வரும் வண்டினங்களைத் தேனளித்து மகிழ்விப்பது களவு வாழ்வின் போக்கிற்கும், கன்றின்ற பிடியினைக் களிறு புறங்காத்து நிற்பது இல்லறக் கடமைச்செறிவுக்கும் எடுத்துக் காட்டுக்களாகும். இவற்றை அறிபவன், தன் கடமையை மறவான் என்பதும் ஆம். தலைவி கூற்முகக் கொள்ளும்போது அதற்கேற்ப உரை கொள்ளல் வேண்டும். - பயன் . இதனைக் கேட்பவன் விரைந்து வருதற்கு ஆவன விரைவிற் செய்வான் என்பதாம். . பாடபேதம் : பாழியஞ் சிலம்பில். 400. கெடுவறியாய் நீயே பாடியவர்: ஆலங்குடி வங்கர்ை. தின : மருதம் துறை : பரத்த்ை தலைவனப் புதழ்ந்தது. முன்பு நின்று யாதோ புகழ்ந்த வாறு எனின், நின்று இன்று அமையாம்' என்று சொன்ன்மை யால் என்பது. ((துவி) பரத்தை தன்னைப் பிரிந்து போகும் தலைவ னிடம் அண்மி, நின்னை இன்றி எனக்கு வேறு என்ன நலன் இருக்கின்றது? ஆகவே நீ சென்ருலும், என்னை மறவாதே மீண்டும் வருவாயாக என்று புகழ்ந்துகூறி வழியனுப்புவதாக அமைந்த செய்யுள் இது.) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/416&oldid=774612" இலிருந்து மீள்விக்கப்பட்டது