பக்கம்:நற்றிணை-2.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 411 கூறித் தேற்றுவதுபோல, அவனும் கேட்டு வரைதற்கு விரையும் படியாகச் சொல்கின்றனள்; (2) இதற்கான நல்லது செய்யும் பெருமாளுகிய நம் தலைவனின் ஆற்றலை விரும்புவோம்' என்று கூறிய தோழிக்குத் தலைமகள் சொன்னதாகவும் கொள்ளலாம்.) அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்துக் குருதி ஒப்பின் கமழ்பூங் காந்தள் வரியணி சிறகின் வண்டுண மலரும் வாழையம் சிலம்பிற் கேழல் கெண்டிய நிலவரை கிவந்த பலவுறு திருமணி 5 ஒளிதிகழ் விளக்கத்து ஈன்ற மடப்பிடி களிறு புறங்காப்பக் கன்ருெடு வதியும் மாமலை நாடன் நயந்தனன் வருஉம் பெருமை உடையள் என்பது தருமோ-தோழி!-கின் திருநுதல் கவினே! 10 தெளிவுரை: தோழி! அருவிகள்_ ஒலித்தபடியிருக்கும் பெரிய மூங்கில்கள் செறிந்த மலைச்சாரலிலே, செங்குருதியைப் போலத்தோன்றும் மணம் கமழ்கின்ற அழகிய செங்காந்தள், வரிகள் அழகுசெய்யும் சிறகினைக் கொண்டவான வண்டினம் தேனுண்ணும்படியாக மலர்ந்திருக்கும். வாழைமரங்களை மிகுதி யாகக் கொண்ட அத்தகைய சிலம்பினிடத்தே, பன்றிகள் பறித்த நிலத்துப் புறங்களிலே வெளியிற் போந்தவாய்க் கிடந்த பலவான அழகிய மணிகளின் ஒளிசுடர்கின்ற விளக்கொளியிலே கன்றை ஈன்றது இளைய பிடியான ஒன்று. அதுதான். அதன் களிருனது அயலிலே நின்று காவல்காத்தபடியிருக்கத் தன் கன்ருேடும் தங்கியிருக்கும். இத்தகைய பெரிய மலைநாடன் நம் தலைவன். நின் அழகான நெற்றியின் கவினைது, அவன், தானே விருப்பம் உடையவனகித் தேடி வருகின்ற பெருமையினை உடையவள் நீ என்பதைத் தருவதாகும் அல்லவோ! ஆதலிஞ்லே அவன், தானே விரைவில் நின் குறையைத் தீர்ப்பனத்லின் நீயும் வருந்த வேண்டாம் என்பதாம். கருத்து : நின் அழகு அவனைத் தானே வந்து மணக்குமாறு செய்யும் என்பதாம். - சொற்பொருள் : குருதி - இரத்தம், வரியணி சிறகு வரிகள் அழகுற அமைந்திருக்கின்ற சிறகு, கேழல் - பன்றி. ம்டப்பிடி . இளைப் பிடியானே. புறங்காப்ப - புறத்தே காவலாகக் காத்து す

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/415&oldid=774610" இலிருந்து மீள்விக்கப்பட்டது