பக்கம்:நற்றிணை-2.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 நற்றிணை தெளிவுரை அம்மெய்யன் காகளுர் 252 இவர் நாகர் குடியினர்; அம்மெய்யன் என்னும் பெயரினர். மெய்யன், மெய்யப்பன், மெய்யம்மை என்பன இந்நாளினும் தமிழ்க்குடிகளின் பெயர்களாக விளங்குவன காணலாம்; இவர் சிறப்புப்பற்றி அம்' என்னும் சொல்லைச் சேர்த்து அம்மெய்யன் என்று வழங்கியிருக்கிருர்கள். இனி, அம்மையன்-தாய் போன்ற தயாளன்-என்று இறைவனைக் குறிக்கும் பெயரே இவ்வாறு மருவி வந்தது என்றும் கூறலாம். காதலனைப் பிரிந் திருக்கும் காதலியை அவள் தோழி ஒவியப்படுத்திக் காட்டும் பாங்கில், புனசுவர்ப் பாவை' என வரும் சொற்கள், உள்ளத்திலே ஒவியக் காட்சிகளாக நின்று நிலைப்பனவாகும். பெண்ணின் காற்கு, முயல்வேட்டு எழுந்த முடுகுவிசைக் கதநாய் நல்நாப் புரையும் சீறடி என்று கூறும் உவமை நினைக்குந் தோறும் இன்பம் அளிப்பது. அல்லங் கீரஞர் 245 இவர் கீரர்குடியினர், இவர் பெயர் அள்ளன் என்றிருப்பது பொருத்தம் என்று ஒளவையவர்கள் கருதுவார்கள். இச் செய்யுள் நெய்தல் திணையைச் சார்ந்தது. நெய்தற் காட்சிகள் எழிலோடு காட்டப்பெறுவதுடன், 'தான் நம் அணங்குதல் அறியான், நம்மின் நான் அணங்கு உற்றமை கூறி......தொழுது நின்றதுவே எனத் தோழி தலைவியிடம் சொல்வதாக வருவன பெரிதும் இனிமை பயப்பதாகும். சங்கறுக்கும் தொழிலோடு கடற்கரைப் பகுதியிலே வாழ்ந்தவரான இவர், இரவுப்போதி லும் தம் தொழிலைச் செய்து வந்த சிறப்பால், அல்அம் கீரனர்" எனப் பெற்றனர் போலும்! ஆலங்குடி வங்களுர் 230, 330, 400 இவர் ஆலங்குடி என்னும் ஊரினர். வங்களுர் என்பது இவரது பெயர். இவ்வூர் புதுக்கோட்டை மாவட்டப் பகுதியி லுள்ள ஒர் ஊர் என்பர். ஆலமரம் நிழல் செய்ய அமைந்த குடியிருப்பாதலால் இப்பெயரை அவ்வூர் பெற்றிருக்கலாம். இவர் உள்ள நெகிழ்வை இனிதாக ஓவியப்படுத்தும் திறன் பெற்றவர். எம்இல் பெருமொழி கூறித் தம்இல் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை போல்பவன்' என்று பரத்தை தலைவனை இகழ்வதாகக் காட்டும் இவர் (குறு. 8) அந்நாளையக் குடும்பத் தலைவர்கள் தலைவியரிடம் கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/424&oldid=774627" இலிருந்து மீள்விக்கப்பட்டது