பக்கம்:நற்றிணை-2.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 நற்றிணை தெளிவுரை இந்நூற் செய்யுட்கள் குறிஞ்சி மலைவளத்தையும், களவுக் காதலரின் உள்ளத்துடிப்பையும் கவிைேடு சித்திரப்படுத்து கின்றன. என்னே தோழி நம் இன்னுயிர் நிலையே?’ என்னும் தொடர்-பெண்மையின் உருக்கமான வி-ை நம் செவிகளில் எப்போதுமே நின்று ஒலிக்கும் செவ்வியதாகும். ஓரம்போகியார் 360. ஐங்குறு நூற்றுள் மருதம் பற்றிய நூறு செய்யுட்களையும் செய்த சான்ருேர் இவர். ஆதன் அவினி, பாண்டியன், சோழன், மத்தி, இருப்பையூர் விரான் என்போரைப் பாடிய சிறப்பினர். இச் செய்யுள் பரத்தமை உறவுடையானைப் பழித்துக் கூறுவதே ஒரு தனியழகு எனலாம். காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப, கையிடை வைத்து மெய்யிடைத் திமிரும், முனியுடைக் கவளம்போல, நனிபெரிது உற்ற நின் விழுமம் உவப்பேன்’ எனத் தலைவியின் கூற்முக உரைப்பது எண்ணி எண்ணி இன்புறுதற்கு உரியதாம். அன்புடைப் பாகரே குத்து முள்ளாற் குத்தி வருத்துதலாலே, உண்ணுதற்குக் கைக் கொண்ட கவளத்தைச், சினம் கொண்ட யானையானது உண்ணுதே,தன் உடல்மேல் எல்லாம் சிதறிற்று என்பதுபோல, எனக்கு அன்புடையாளுகிய நீயே என்னை வருத்தும்போது, என் இன்பம் எல்லாம் துன்பமாகிப்போக, என் மேனியும் நலன் சிதைந்து கெட்டது; என் அன்பு உளத்தால் வந்த துயராதலின் யாதும் உவப்பேன்" என்கின்றனள். ஏக்கம் வருத்தம் சால்பு பெண்மை பொறுப்பு கற்பு எனும் பண்புநலன்கள் எல்லாமே ஒன்றுபட்டு அலைமோதும் பெண்மையுள்ளத்தை இந்தச் சொற்களிற் காண்கின்ருேம். இவ்வாறு தலைவியர் மர்ட்டே அநுதாபத்தோடு தம் மருதச்செய்யுட்களை ஒருபக்கமாகச் சார்ந்து உரைப்பதனலேயே, இவரை ஓரம் போகியார்’ என்றனர் எனவும் கருதலாம். ஒளவையார் 295,311.881,390,394 பாணர் மரபினராகவும் பைந்தமிழும் பண்புச்செவ்வியும் மிகுந்தாராகவும் விளங்கிய இப் புலவர் பெருமாட்டியாரின் வரல்ாறு வியந்து வியந்து போற்றுதற்கு உரியதாகும். தகடூர் அதியம்ானுடன் நெருங்கிய நட்பு உடையராயினும், தமிழ்கத்து அந்நாளைய மக்களாலும் ஆட்சித் தலைவர்களாலும் ஒருங்கே மதித்துப் போற்றப்பெற்ற சால்பினரும் இவராவர். புலமை எளிமை செம்மை அஞ்சாமை அருள்மை போன்ற பண்புகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/430&oldid=774642" இலிருந்து மீள்விக்கப்பட்டது