பக்கம்:நற்றிணை-2.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\ 446 - நற்றிணை தெளிவுரை போட்ட செந்தினை உணங்கல் த் தொகுக்கும் குறிஞ்சி மகளிரை இச் செய்யுளிற் காணலாம். மதுரை ஆருலவிய காட்டு ஆலம்பேரி சாத்தனர் 303,338 ஆருலவிய நாடு என்பது மதுரை சார்ந்த ஒரு நாட்டுப் பகுதி. அப் பகுதியிலுள்ள ஆலம்பேரி என்னும் ஊரினர். இவர் வாணிகச் சாத்தினர். பேர்ஏரி யுள்ள ஊர்கள், பேர் சிதைந்து பேரி என வருவது இயல்பு. கடப்பேரி வேலப் பேரி, என்பவை போல. தொன்முது கடவுள் சேர்ந்த பராரை மன்றப் பெண்ணை’ எனப் பனைமரத்தடியில் தெய்வம் வீற்றிருக்கும் மரபை இவர் காட்டுவர். இச் செய்யுள் இந்த ஆலம்பேரி யைக் கடற்கரையூர் என்று கருதச் செய்யும். ஆலங்குளம்' என நெல்லை மாவட்டத்துள்ள ஊர்கள் இன்றும் சிலவாகும். மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனர் 273. இவர் 'கூத்தனர்' என்னும் சிவன் பெயர் பெற்றவர். சேந்தன், தந்தையார் பெயர். இளம்பால் ஆசிரியன் என்பது இவர் சிறர்களுக்குத் தொடக்கக்கல்வி பயிற்றி வந்தவர் என்று காட்டும். குன்ற நாடனை உள்ளுதொறும் நெஞ்சு நடுக்குறுTஉம் அவன் பண்பு தரு படரே" என்று பிரிவின் வேதனையால் கலங்கிய மகளிர் வாக்காக இவர் கூறுவது மறக்க முடியாத சிறப்பினதாகும். - - - மதுரை ஈழத்துப் பூதன் தேவளுர் 386 - மதுரையிலிருந்த பூதன் தேவனர் என்பார் இவர். மற்ருெரு பூதன் தேவனரும் இந்நூலின் 80 ஆவது செய்யுளைச் செய்தவ ராகக் காணப்படுகின்றனர். ஈழம் என்பது தற்கால இலங்கை யின் பழைய பெயராதலால், இவர், அங்கிருந்து இங்கு வந்து தங்கியவர் என்பர். தென்கிழக்குத் திசைக்கே"ஈழம்" என்று ஒரு பெயர் வழக்கு உளதாதலின், இவரை மதுரையின் தென்கிழக்குப் பகுதியில் இருந்தவர், முருகாடும் வேலன்போலச் சதுக்க பூதங்கட்கு வழிபாடாற்றி வந்த மரபினர் எனலாம். கரும்பின் வெண்முகை வேல்போலத் தோன்றும் எனவும், குரீஇ முயன்று செய் குடம்பை மூங்கில் அம்கழைத் தூங்கும்' எனவும், வடபுல வாடைக்குப் பிரிவோர் மடவர்' எனவும் இவர் நயம் பெற எடுத்து உரைப்பூர், - \, S.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/450&oldid=774685" இலிருந்து மீள்விக்கப்பட்டது