பக்கம்:நற்றிணை-2.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிய சான்ருேர்கள் 447 மதுரை'ஒலைக்கடையத்தார் கல்வெள்ளையார் 250, 369 வெள்ளையார் இவர் பெயர்; இன்றும் தென் தமிழ்நாட்டுப் பகுதிகளில் வெள்ளைச்சாமி, வெள்ளையம்மாள், வெள்ளையன், வெள்ளைச்சி போன்ற பெயர்கள் வழக்காற்றில் உள்ளன. 'ஒலைக் கடையம் என்பது மதுரையில் ஒரு பகுதியாகலாம். பனை ஒலையால் பெட்டிகள் வளைகள் வேய்ந்து விற்கும் தொழில்செய்து வந்தவராகவும் கருதலாம். கடையம் கடகம் என்பன ஒலைப் பெட்டிகளுக்கும் வளைகளுக்கும் வழங்கப்படும் பெயர்கள். இப் பாடலின் (250) போக்கு இவரைப் பெண்பாலர் எனவும் காட்டும். தெருவிலே அரிபெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில் தேர்நடை பயிற்றும் தேமொழிப் புதல்வனை'க் கண்ட தகப்பன். ஆர்வத்தோடு எடுத்துத் தழுவப் போகின்றன். அவன், தன்னை மறந்து பரத்தை உறவிலே மயங்கிக் கிடந்த வேதனையால் வெதும்பியிருந்த அவன் மனைவிக்கு அதைக் கண்டதும் நெஞ்சம் கொதிக்கிறதாம். யாரையோ நீ எனக் கேட்டுத் தன் குழந்தைன்ய்த் தானே முந்திப்ப்ோய் எடுத்துக் கெர்ள்கின் ருளாம். ஊடலிலே சிறந்த ஒவியம் இது; பெண்மையைப் புரிந்த பெண்மையின் வாக்கு. சிறை அடு கடும் புனல் அன்ன, என் நிறையடு காமம்' என்னும் சொற்களும் வேதனைக் குமுறலை வெளிப்படுத்தும் வெம்மையான சொற்களாம். மதுரைக் கண்ணத்தர்ை 351 கண்ணத்தன் என்பார் இவர் கண்அணையார் என்று பொருள்படும் சொல் இது. இச் செய்யுள் அருமையான கற்பனை நயம் செறிந்தது. தாய்க்குத் தலைவியின் களவைக் குறிப்பாகத் தோழி உணர்த்துகின்ருள். அன்னையே! தெய்வம் பேணி வருந்தல் வேண்டா: புனம் காப்பின், தோழி, தன் நலனை மீளவும் பெறுவாள்' என்கின்ருள், நயமாக. மதுரைக் காருலவியங் கூத்தனர் 325 இவர் கூத்துத் தொழிலராகவோ, அல்லது கூத்தகிைய சிவனின் நாமத்தைப் பெயராகப் பெற்றவரோ ஆகலாம். கார் உலவி அம் கூத்து' என்பது மேகப்போக்குப்போல அசைந்தாடும் கூத்து வகையாக இருக்கலாம். பூப்போல் உண்கண் புதுநலம் சின்தய வீங்குநீர் வாரக் கண்டும் போதல் தகுமோ? என்னும் , கேள்வி, தலைவனின் நெஞ்சைப் பிரிதல் நினைவகற்றித் தடுப்பு தாகும, - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/451&oldid=774688" இலிருந்து மீள்விக்கப்பட்டது